LOADING...
ராஜமௌலி- மகேஷ் பாபு படத்தின் பட்ஜெட் ரூ. 1200 கோடியா? டைட்டில் வெளியீட்டு நிகழ்விற்கே ரூ. 25 கோடி செலவு!
மொத்த பட்ஜெட் குறித்த தகவல் வெளியாகி, திரையுலகை வியப்பில் ஆழ்த்தியுள்ளது

ராஜமௌலி- மகேஷ் பாபு படத்தின் பட்ஜெட் ரூ. 1200 கோடியா? டைட்டில் வெளியீட்டு நிகழ்விற்கே ரூ. 25 கோடி செலவு!

எழுதியவர் Venkatalakshmi V
Nov 18, 2025
12:49 pm

செய்தி முன்னோட்டம்

பாகுபலி, RRR போன்ற பிரமாண்ட படங்களை எடுத்தவர் இயக்குனர் S.S ராஜமௌலி. இவரது அடுத்த படைப்பாக வரவிருக்கும் பிரம்மாண்ட திரைப்படமான 'வாரணாசி' படத்தை தயாரிப்பதற்காக திட்டமிடப்பட்டுள்ள மொத்த பட்ஜெட் குறித்த தகவல் வெளியாகி, திரையுலகை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இணையத்தில் வெளியான செய்தியின்படி இப்படத்தில் பணியாற்றிய கலைஞர்களின் ஊதியம் உட்பட, 'வாரணாசி' திரைப்படத்தின் மொத்த தயாரிப்பு செலவு சுமார் ரூ.1200 கோடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியத் திரைப்பட வரலாற்றில் மிக உயர்ந்த பட்ஜெட்டில் உருவாகும் படங்களில் இதுவும் ஒன்றாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இது அவரது முந்தையப் படைப்புகளான 'பாகுபலி' மற்றும் 'RRR' திரைப்படங்களை விடவும் மிக பெரிய பட்ஜெட் என Gulte செய்தி தெரிவிக்கிறது.

இலக்கு

உலகளாவியச் சந்தை இலக்கு

உலகளாவிய சந்தையில் இந்திய சினிமாவுக்கு ஒரு புதிய தளத்தை உருவாக்க வேண்டும் என்ற ராஜமௌலியின் இலக்கே, இந்த பிரமாண்ட பட்ஜெட்டிற்குக் காரணம். பார்வையாளர்களுக்குப் பிரமிப்பூட்டும் அனுபவத்தை வழங்கும் வகையில், மிக உயர்தரமான விஷுவல் எஃபெக்ட்ஸ் (VFX) மற்றும் அதிநவீனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த ராஜமௌலி திட்டமிட்டுள்ளார். அதோடு உலகெங்கிலும் உள்ள பல இடங்களில் நீண்ட காலப் படப்பிடிப்புத் திட்டங்கள் தேவைப்படுவதால், மொத்தச் செலவும் அதிகரித்துள்ளது. படத்தின் முதல் விளம்பர நிகழ்வுக்கே (Title Glimpse) ரூ. 20 கோடிக்கும் அதிகமாகச் செலவிடப்பட்ட நிலையில், ஒட்டுமொத்தப் பட்ஜெட் ரூ. 1200 கோடியைத் தாண்டுவதில் ஆச்சரியமில்லை என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.