Loading...
மீண்டும் புதிய ஹாரர் படத்தில் ஆர் மாதவன்: இயக்குநர் விஷால் பூரியா அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஷால் பூரியாவின் புதிய திகில் படத்தில் இணைகிறார் நடிகர் ஆர். மாதவன்.

மீண்டும் புதிய ஹாரர் படத்தில் ஆர் மாதவன்: இயக்குநர் விஷால் பூரியா அதிகாரப்பூர்வ அறிவிப்பு

எழுதியவர் Vasuki
Oct 31, 2026
03:13 pm

செய்தி முன்னோட்டம்

யாவரும் நலம் (13B) மற்றும் சைத்தான் போன்ற அதிரடி திரில்லர் திரைப்படங்கள் மூலம் ரசிகர்களை உறைய வைத்த பான்-இந்தியா நடிகர் ஆர். மாதவன், பாலிவுட்டின் முன்னணி ஹாரர் திரைப்பட இயக்குநரான விஷால் பூரியா இயக்கும் புதிய பேய் படத்தில் கதாநாயகனாக ஒப்பந்தமாகியுள்ளார். லபச்சாபி, சோரி பட வரிசைகள் மற்றும் சமீபத்தில் கஜோல் நடிப்பில் வெளியான மா ஆகிய திரைப்படங்களின் மூலம் இந்திய சினிமாவில் தனக்கென தனித்துவமான திகில் பாணியை நிலைநிறுத்தியுள்ள விஷால் பூரியா இயக்கத்தில், மாதவன் இணையும் இந்த புதிய திட்டம் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

உற்சாகம்

மாதவன் தான் எனது முதல் சாய்ஸ்

இயக்குநர் விஷால் பூரியா பேசுகையில், "இக்கதையை எழுதியபோதே எனது முதல் மற்றும் ஒரே தேர்வாக மாதவன் சார் மட்டுமே இருந்தார்.

அவர் இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டது எனக்குப் பெரும் உற்சாகத்தை அளிக்கிறது.

எனது ஆல்-டைம் ஃபேவரிட் கல்ட் கிளாசிக் படமான '13B' மூலமாகவே அவர் இந்திய சினிமாவின் அசல் ஹாரர் ஸ்டார் என்பதை நிரூபித்தவர். ஆழ்ந்த திகில் சினிமா மீதான அவரது புரிதல், அர்ப்பணிப்பு மற்றும் அனுபவம் மிக அரிதானவை.

ஒரு நடிகராக, எழுத்தாளராக, தயாரிப்பாளராகப் பன்முக அனுபவம் கொண்ட அவர் இணைந்தது பெரும் வரப்பிரசாதம். எலும்புகளை உறைய வைக்கும் பயத்தை உருவாக்குவோம்" என்றார்.

தயாரிப்பு

மாதவனின் முந்தைய திகில் வெற்றிகள்

இப்படத்தை ஃப்ரோஸ்ட்லிட் புரொடக்ஷன் லிமிடெட் சார்பில் ரோஹித் ரஞ்சன் பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறார்.

முன்னதாக 2009-ஆம் ஆண்டு விக்ரம் குமார் இயக்கத்தில் தமிழ் மற்றும் இந்தியில் ஒரே நேரத்தில் வெளியான யாவரும் நலம் திரைப்படத்தில் மனோகர் கதாபாத்திரத்தில் மாதவன் நடித்த யதார்த்தமான நடிப்பு இன்றுவரை பேசப்பட்டு வருகிறது.

அதேபோல் சமீபத்தில் விகாஸ் பால் இயக்கத்தில் அஜய் தேவ்கன், ஜோதிகா ஆகியோருடன் இணைந்து மாதவன் எதிர்மறை மாந்திரீகர் பாத்திரத்தில் மிரட்டிய சைத்தான் திரைப்படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றது.

தற்போது மீண்டும் ஒரு தீவிரமான ஹாரர் களத்தில் மாதவன் களமிறங்குவதால், இந்த புதிய திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் உச்சத்தை எட்டியுள்ளன.

ADVERTISEMENT

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ADVERTISEMENT