NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / 'புஷ்பா 2'விவகாரம்: பாதிக்கப்பட்ட குழந்தைக்கு வென்டிலேட்டரில் சிகிச்சை
    அடுத்த செய்திக் கட்டுரை
    'புஷ்பா 2'விவகாரம்: பாதிக்கப்பட்ட குழந்தைக்கு வென்டிலேட்டரில் சிகிச்சை
    அல்லு அர்ஜுன்-ஐ ஜாமீனில் விடுவிக்கப்பட்டதை அடுத்து காவல்துறை மேல்முறையீடு

    'புஷ்பா 2'விவகாரம்: பாதிக்கப்பட்ட குழந்தைக்கு வென்டிலேட்டரில் சிகிச்சை

    எழுதியவர் Venkatalakshmi V
    Dec 18, 2024
    11:34 am

    செய்தி முன்னோட்டம்

    நடிகர் அல்லு அர்ஜுன், டிசம்பர் 4ஆம் தேதி புஷ்பா 2 பிரீமியர் ஷோவிற்காக ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கிற்கு வந்தபோது ரசிகர்களிடையே ஏற்பட்ட நெரிசலில் சிக்கி படுகாயமடைந்த எட்டு வயது சிறுவன் ஸ்ரீ தேஜ், இப்போது தீவிர சிகிச்சையில் இருக்கிறார்.

    ஹைதராபாத் தனியார் மருத்துவமனையின் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் (PICU) அவருக்கு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    செவ்வாய்கிழமை (டிசம்பர் 17) வெளியிடப்பட்ட மருத்துவ அறிக்கைபடி, தேஜுக்கு குறைந்தபட்ச ஆக்ஸிஜன் ஆதரவுடன் செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது என்று கூறியது.

    மருத்துவ மேம்படுத்தல்

    தேஜின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது, அரசு ஆதரவளிக்கிறது

    மருத்துவ அறிக்கை மேலும்,"அவரது காய்ச்சல் குறைந்து வருகிறது, மேலும் அவர் குறைந்த ஐனோட்ரோப்களில் இருக்கிறார். அவரது முக்கிய அளவுருக்கள் நிலையாக உள்ளது. மேலும் அவர் உணவை நன்கு எடுத்துக்கொள்கிறார். அவரது நிலையான நரம்பியல் நிலையைக் கருத்தில் கொண்டு, வென்டிலேட்டரில் இருந்து உணவு தருவதை எளிதாக்க ஒரு ட்ரக்கியோஸ்டமி திட்டமிடப்பட்டுள்ளது. " எனக்கூறியது.

    ஹைதராபாத் போலீஸ் கமிஷனர் சி.வி.ஆனந்த், சுகாதாரத்துறை செயலர் கிறிஸ்டினா இசட் சோங்து ஆகியோர் மருத்துவமனைக்குச் சென்றனர்.

    குழந்தையின் சிகிச்சைக்கு தேவையான உதவிகளை அரசு செய்யும் என உறுதி அளித்தனர்.

    மூளை பாதிப்பு

    குழந்தைக்கு மூளை பாதிப்பு ஏற்பட்டுள்ளது என அரசு அதிகாரி தகவல்

    தி இந்து நாளிதழில், ஆனந்த் சிறுவனைப் பார்வையிட்ட பிறகு ஊடகங்களுக்குப் பேட்டியளித்தார், மேலும் குழந்தைக்கு மூளை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகப் பகிர்ந்து கொண்டார்.

    மீட்பு செயல்முறை கணிசமான நேரம் எடுக்கும் என்று அவர் விளக்கினார். "நெரிசலின் போது ஆக்ஸிஜன் சப்ளை இல்லாததால் உயிர் பிழைத்த குழந்தைக்கு, மூளை பாதிப்பு ஏற்பட்டது. மேலும் சிக்னல்களை பகுப்பாய்வு செய்யும் திறனை மூளை வளர்த்துக் கொள்ள நீண்ட தூரம் செல்லும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்."

    சிறுவன் தற்போது வென்டிலேட்டர் ஆதரவில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    நடிகரின் பதில்

    'ஆழ்ந்த கவலை': தேஜ் உடல்நிலை குறித்து அர்ஜுன் கவலை தெரிவித்தார்

    தற்போது இந்த சம்பவம் தொடர்பான சர்ச்சையில் சிக்கியுள்ள நடிகர் அல்லு அர்ஜுன், ஞாயிற்றுக்கிழமை தேஜின் உடல்நிலை குறித்து மிகுந்த கவலை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

    "துரதிர்ஷ்டவசமான சம்பவத்திற்குப் பிறகு தொடர்ந்து மருத்துவ கவனிப்பில் இருக்கும் இளம் ஸ்ரீ தேஜ் பற்றி நான் ஆழ்ந்த கவலையுடன் இருக்கிறேன்" என்று அவர் X இல் எழுதினார்.

    "தற்போதைய சட்ட நடவடிக்கைகள் காரணமாக, இந்த நேரத்தில் அவரையும் அவரது குடும்பத்தினரையும் சந்திக்க வேண்டாம் என்று எனக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனது பிரார்த்தனைகள் அவர்களுடன் இருக்கும், மேலும் மருத்துவ... குடும்பத் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கான பொறுப்பை ஏற்க நான் கடமைப்பட்டுள்ளேன்." எனப்பதிவிட்டார்.

    சட்ட நடவடிக்கை

    மேல்முறையீடு செய்ய திட்டமிடும் தெலுங்கானா காவல்துறை 

    இந்த நிலையில் இந்த விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்ட நடிகர் அல்லு அர்ஜுன்-ஐ ஜாமீனில் விடுவிக்கப்பட்டதை அடுத்து தெலுங்கானா காவல்துறை மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளது.

    அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டதிற்கு நாடு முழுவதும் பல தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பின.

    இந்த விவகாரத்தில் அவர் கைது செய்யப்பட்டது அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை எனவும் கூறப்பட்டது.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    #NewsUpdate | நடிகர் அல்லு அர்ஜுனின் இடைக்கால ஜாமினை எதிர்த்து மேல்முறையீடு செய்ய தெலங்கானா போலீஸ் திட்டம்!#SunNews | #AlluArjun | #Pushpa2TheRule | #TelanganaPolice pic.twitter.com/pOKCYUxCYX

    — Sun News (@sunnewstamil) December 18, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அல்லு அர்ஜுன்
    ஹைதராபாத்

    சமீபத்திய

    முதன்முறையாக, தாலிபான் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசிய இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எஸ்.ஜெய்சங்கர்
    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா

    அல்லு அர்ஜுன்

    'புஷ்பா 2: தி ரூல்' டீஸர் தேதி பற்றி தகவல் வெளியானது தெலுங்கு திரையுலகம்
    'புஷ்பா 2' புதிய போஸ்டர் வெளியீடு; நாளை காலை டீஸர் வெளியாகும் என அறிவிப்பு படத்தின் டீசர்
    அல்லு அர்ஜுன் நடிக்கும் புஷ்பா 2 டீஸர் வெளியானது படத்தின் டீசர்
    புஷ்பா 2 படத்தின் முதல் பாடல் இன்று வெளியானது ரஷ்மிகா மந்தனா

    ஹைதராபாத்

    ஹைதராபாத்: 1,000 ஆண்டுகள் பழமையான சமண தூண்கள் கண்டுபிடிப்பு  இந்தியா
    ஹைதராபாத் அருகில் விரைவு ரயிலில் ஏற்பட்ட தீ விபத்து;  மேற்கு வங்காளம்
    ரயிலில் தீயினை பரவாமல் தடுக்க ரயிலை ஒன்றுக்கூடி தள்ளிய வீடியோ இணையத்தில் வைரல்  இந்தியா
    தெலுங்கானா : முன்னாள் மாவோயிஸ்ட் சித்தாந்தவாதி கவிஞர் கதர் காலமானார் தெலுங்கானா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025