புஷ்பா 2 படத்திற்காக அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா ஆகியோர் பெற்ற சம்பள விவரங்கள்
தெலுங்கு பட இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் மற்றும் ரஷ்மிகா மந்தனா நடித்த புஷ்பா-2 திரைப்படம் ஐந்து நாட்களில் உலகம் முழுவதும் ரூ.900 கோடிக்கு மேல் வசூலித்தது. தகவல்களின்படி, புஷ்பா-2 படத்திற்காக இந்த ஜோடி மற்றும் இயக்குனர் சுகுமார் பெரும் தொகையை சம்பளமாக பெற்றுள்ளனர். அதோடு பாக்ஸ் ஆபீசில் படம் பெரும் வசூல் பெறுவதால், ஆதாரங்களின்படி, வரும் லாபத்தில் 40 சதவீதத்தை அல்லு அர்ஜுன் பெறுவார் எனவும் கூறப்படுகிறது. நடிகர் அல்லு அர்ஜுன் புஷ்பா 2 விற்காக தனிப்பட்ட வகையில் சம்பளம் பெறவில்லை. இருப்பினும், புஷ்பா: தி ரைஸ் படத்திற்கு செய்ததைப் போலவே லாபப் பகிர்வு வருவாய் மாதிரியைத் தேர்ந்தெடுத்துள்ளார். பாலிவுட்டில் பல நடிகர்கள் இந்த லாபப் பகிர்வு முறையைப் பின்பற்றுகிறார்கள்.
ரஷ்மிகாவின் சம்பள விவரங்கள்
புஷ்பா: தி ரைஸ் படத்தின் வெளியீட்டின் போது சுமார் ரூ.3 கோடி சம்பளம் வாங்கிய ராஷ்மிகா மந்தனா, இரண்டாவது படத்துக்கு ரூ.8 கோடியை உயர்த்தியுள்ளார். அதாவது புஷ்பா 2 படத்திற்காக அவர் ரூ. 11-12 கோடி வரை ஊதியம் பெற்றதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்திய அளவில் ரஷ்மிகா பெற்றுள்ள பிரபலம் காரணமாக தயாரிப்பாளர்கள் அவரது கட்டணத்தை உயர்த்தியுள்ளனர் எனக்கூறப்படுகிறது. புஷ்பா 2 படத்தின் வருவாயில் 30 சதவீத லாபத்தை, மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் இயக்குனர் சுகுமார் ஆகிய இரு தரப்பினரும் பகிர்ந்து கொள்வார்கள்.