Page Loader
அல்லு அர்ஜுன் நடிக்கும் 'புஷ்பா-2' திரைப்பட ரிலீஸ் குறித்த அப்டேட் 
புஷ்பா-2 திரைப்பட ரிலீஸ் குறித்த அப்டேட்

அல்லு அர்ஜுன் நடிக்கும் 'புஷ்பா-2' திரைப்பட ரிலீஸ் குறித்த அப்டேட் 

எழுதியவர் Nivetha P
Aug 25, 2023
03:57 pm

செய்தி முன்னோட்டம்

அல்லு அர்ஜுன் நடிப்பில், இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் 2022ம் ஆண்டில் வெளியான திரைப்படம் 'புஷ்பா'. ராஷ்மிகா நாயகியாக நடித்திருந்த இப்படத்தில் ஃபஹத் பாசில், சுனில், தனஞ்செயா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தேவி ஸ்ரீபிரசாத் இசையில் உருவான இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் நல்ல வரவேற்பினை ரசிகர்கள் மத்தியில் பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டு வருகிறது என்று தகவல்கள் முன்னதாக வெளியானது. அதனைத்தொடர்ந்து தற்போதைய தகவல்படி, இப்படத்தில் ஃபஹத் பாசிலுக்கான படப்பிடிப்பு முடிந்துள்ளது என்றும், ராஷ்மிகாவின் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது என்றும் கூறப்படுகிறது. இதனிடையே இப்படம் வரும் 2024ம் ஆண்டு மார்ச் மாதம் 22ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது என்ற தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

'புஷ்பா 2 திரைப்படம்