Page Loader
சிவகார்த்திகேயன் நடிக்கும் 'மாவீரன்' கதையில் மாற்றமா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த தயாரிப்பாளர் தரப்பு
சிவகார்த்திகேயனின் 'மாவீரன்' படத்தை சுற்றி எழுந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த தயாரிப்பாளர்

சிவகார்த்திகேயன் நடிக்கும் 'மாவீரன்' கதையில் மாற்றமா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த தயாரிப்பாளர் தரப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Jan 28, 2023
03:00 pm

செய்தி முன்னோட்டம்

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் 'மாவீரன்' திரைப்படத்தை, 'மண்டேலா' படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கி வருகிறார். படத்தின் படப்பிடிப்பு பாதி முடிவடைந்த நிலையில், படத்தின் இயக்குனருக்கும், சிவகார்த்திகேயனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், அதன் விளைவாக, படத்தின் கதையை மாற்றியுள்ளதாகவும் செய்திகள் வெளி வந்தன. இதை, அந்த படத்தின் தயாரிப்பாளர் தரப்பு மறுத்து, ஒரு அறிக்கையை தங்களது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். 'ஷாந்தி டாக்கீஸ்' தயாரிக்கும் 'மாவீரன்' படத்தின் கதையில் எந்த மாற்றமும் இல்லையென்றும், படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்து இருந்தனர். மேலும் இந்த வந்ததிகளுக்கு காரணமாக இருந்த ஒரு குறிப்பிட்ட வலைதள பக்கத்தையும் மறைமுகமாக சாடியுள்ளனர். இப்படத்தில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்கிறார்.

ட்விட்டர் அஞ்சல்

'மாவீரன்' கதையில் மாற்றமா?