சிம்பு, விஷாலை தொடர்ந்து, தனுஷிற்கு தயாரிப்பாளர் சங்கம் வைத்த செக்
செய்தி முன்னோட்டம்
சமீபத்தில் நடிகர் சிம்பு, விஷால் உள்ளிட்ட ஒரு சில முன்னணி நடிகர்கள் மீது தயாரிப்பாளர் சங்கம் ஒரு உத்தரவை பிறப்பித்தது.
அதன்படி, ஏற்கனவே அட்வான்ஸ் பெற்ற தயாரிப்பு நிறுவனத்தின் திரைப்படங்களில் பணிபுரியாமல், புதியதாக வரும் தயாரிப்பு நிறுவனங்களுக்கு சென்று விடுகிறார்கள்.
இதனால், ஏற்கனவே அட்வான்ஸ் கொடுத்துள்ள தயாரிப்பாளர்கள் பெரும் பொருளாதார இழப்பை சந்திக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள் என கூறப்பட்டது.
அதனால், அட்வான்ஸ் பெற்ற தயாரிப்பாளரின் படங்களை முடிக்காமல் வெளி படங்களில் நடிக்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டது.
இந்த சூழலில், நடிகர் தனுஷும் பல தயாரிப்பாளர்களிடம் முன்பணம் பெற்றிருக்கும் சூழ்நிலையில், இனிவரும் காலங்களில் தயாரிப்பாளர்கள், தனுஷ் நடிக்கும் புதிய திரைப்படங்களின் பணிகளை துவங்குவதற்கு முன்பாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தினை கலந்தாலோசிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
படப்பிடிப்பு
நிறுத்தப்படவுள்ள படப்பிடிப்பு பணிகள்
இந்த தயாரிப்பாளர் கூட்டத்தின் இறுதியில் மேலும் சில முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
அதில் குறிப்பாக, வருகிற 16.08.2024 முதல் புதிய திரைப்படங்கள் துவங்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது என்றும் தற்போது படப்பிடிப்பில் உள்ள திரைப்படங்களின் விவரங்களை கடிதம் மூலம் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியதோடு, எஞ்சியுள்ள படப்பிடிப்புகளை வருகிற அக்டோபர் 30ம் தேதிக்குள் முடித்துக் கொள்ளுமாறு தயாரிப்பாளர்களை அறிவுறுத்தி உள்ளனர்.
மேலும், வருகின்ற 01.11.2024 முதல் தமிழ் சினிமாவின் அனைத்துவிதமான படப்பிடிப்பு சம்பந்தப்பட்ட வேலைகளும் நிறுத்துவது என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
தனுஷிற்கு தயாரிப்பாளர் சங்கம் செக்
#BREAKING || தனுஷ் பல தயாரிப்பாளர்களிடம் முன்பணம் பெற்றுள்ளதால் இனி அவரை வைத்து படம் தயாரிக்கவுள்ள தயாரிப்பாளர்கள், தயாரிப்பாளர் சங்கத்திடம் கலந்தாலோசிக்க வேண்டும் - தயாரிப்பாளர் சங்கம்#Dhanush #Raayan #TamilMovies pic.twitter.com/zFRrlYCa0A
— Tamil movies tamil television (@Tamilmoviestam3) July 29, 2024