
"அவளை பற்றி நான் வாயை திறந்தால், அவள் மானம் போய் விடும்": சமந்தாவை சாடும் தயாரிப்பாளர் சிட்டிபாபு
செய்தி முன்னோட்டம்
நடிகை சமந்தா ரூத் பிரபு பற்றி சமீபத்தில் தெலுங்கு படத்தயாரிப்பாளர் சிட்டிபாபு என்பவர் விமர்சித்து பேசி இருந்தார்.
"சமந்தாவின் சினிமா வாழ்க்கை முடிந்துவிட்டது. 'நட்சத்திர நாயகி' என்ற அந்தஸ்தை இழந்துவிட்டார். குறிப்பாக விவாகரத்திற்கு பின்னர்" என்றும், "யசோதா படத்தின் ப்ரோமோஷன்களில், கண்ணீர் சிந்தி, படத்தை ஓட வைக்க முயன்றார்.
தற்போது சாகுந்தலம் படத்தின் ப்ரோமோஷனுக்கும் கிட்டத்தட்ட அதையே ஆயுதமாக பயன்படுத்தினார்" என பகீர் குற்றசாட்டை வைத்தார் சிட்டிபாபு. "ஒவ்வொரு முறையும் செண்டிமெண்ட் வேலை செய்யாது. இவை அனைத்தும் சீப்பான மற்றும் பைத்தியக்காரத்தனமான செயல்கள்," என்று அவர் சமந்தா பற்றி அவதூறாக பேசினார்.
card 2
சமந்தாவின் மறைமுக பதிவும், எதிர்தாக்குதலில் ஈடுபட்ட தயாரிப்பாளரும்
அந்த பேட்டி வைரலானதை அடுத்து, அவருக்கு தக்க பதிலடி தரும்வகையில், தனது இன்ஸ்டாகிராமில், ஒரு பதிவை இட்டார் சமந்தா.
அதில், "காதுகளில் முடி வளர்வது ஏன் தெரியுமா?" என ஒரு பதிவை இட்டார்.
இதைபார்த்த அவரின் ரசிகர்களும், ஊடகத்துறையினரும், அவர், சிட்டிபாபுவை தான் குறிவைத்து சூசகமாக குறிப்பிட்டுள்ளார் என கூறியது.
அதற்கு காரணம், சிட்டி பாபுவிற்கும், செவி மடலில் அதிகமான முடி வளர்ச்சி உண்டு.
தற்போது அதற்கு சிட்டிபாபு விளக்கம் தந்துள்ளார்.
அதில் அவர் கூறியதாவது, "என் காதில் உள்ள முடியைப் பற்றி பேசாமல், என் வார்த்தைகளில் உள்ள நேர்மையைப் பற்றி பேசினால் நன்றாக இருந்திருக்கும். அவளை பற்றி நான் வாயை திறந்தால், அவள் மானம் போய் விடும்," என கூறி உள்ளார்.