LOADING...
98-வது ஆஸ்கர் விருதுகளை வழங்குகிறார் பிரியங்கா சோப்ரா
98-வது ஆஸ்கர் விருதுகளை வழங்குகிறார் பிரியங்கா சோப்ரா

98-வது ஆஸ்கர் விருதுகளை வழங்குகிறார் பிரியங்கா சோப்ரா

எழுதியவர் Venkatalakshmi V
Mar 06, 2026
12:04 pm

செய்தி முன்னோட்டம்

உலக திரையுலகின் மிக உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருது மேடையில், இந்திய நடிகை பிரியங்கா சோப்ரா மீண்டும் ஒருமுறை விருதை வழங்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 98-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா வரும் மார்ச் 15 அன்று நடைபெறுகிறது. இந்திய நேரப்படி மார்ச் 16 அதிகாலை 5:30 மணிக்கு நேரலையாக ஒளிபரப்பப்படும். இந்த விருது வழங்கும் நிகழ்வு ஹாலிவுட்டில் உள்ள புகழ்பெற்ற டால்பி தியேட்டரில் நடைபெறும். பிரபல நகைச்சுவை நடிகர் கோனன் ஓ பிரையன் இந்த விழாவை தொகுத்து வழங்குகிறார்.

பயணம்

பிரியங்கா சோப்ராவின் ஆஸ்கர் பயணம்

ஏற்கனவே 2016-ஆம் ஆண்டு ஆஸ்கர் மேடையில் விருதை வழங்கிய பிரியங்கா சோப்ரா, 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அந்த கௌரவத்தை பெற்றுள்ளார். அண்மையில் கோல்டன் குளோப் (Golden Globe) விருது விழாவிலும் இவர் பிளாக்பிங்க் லிசாவுடன் (Blackpink Lisa) இணைந்து விருதை வழங்கியது குறிப்பிடத்தக்கது. "The 2026 Academy Awards" என்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் இந்தத் தகவலை அவர் உறுதி செய்துள்ளார்.

நட்சத்திரங்கள்

அணிவகுக்கும் ஹாலிவுட் நட்சத்திரங்கள்

பிரியங்கா சோப்ராவுடன் இணைந்து பல முன்னணி ஹாலிவுட் நட்சத்திரங்களும் விருதுகளை வழங்க உள்ளனர் ராபர்ட் டவுனி ஜூனியர் (Iron Man): இவர் தனது நீண்ட காலத் திரை இணை க்வினெத் பேல்ட்ரோவுடன் இணைந்து மேடை ஏற உள்ளார். ஆன் ஹாத்வே: ஆஸ்கர் விருது வென்ற இவர் பிரியங்காவுடன் மேடையைப் பகிர்ந்து கொள்கிறார். மற்றவர்கள்: கிறிஸ் எவன்ஸ் (Captain America), ஜேவியர் பார்டெம், டெமி மூர் மற்றும் கடந்த ஆண்டின் வெற்றியாளர்களான அட்ரியன் பிராடி, மைக்கி மேடிசன் உள்ளிட்டோர் இந்தப் பட்டியலில் உள்ளனர்.

Advertisement