NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / 'ஆடுஜீவிதம்': நிர்வாணக் காட்சிகளைப் படமாக்க 3 நாட்கள் பட்டினி இருந்த நடிகர் பிருத்விராஜ் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    'ஆடுஜீவிதம்': நிர்வாணக் காட்சிகளைப் படமாக்க 3 நாட்கள் பட்டினி இருந்த நடிகர் பிருத்விராஜ் 
    'ஆடுஜீவிதம்' திரைப்படம், மார்ச் 28 அன்று வெளியானது

    'ஆடுஜீவிதம்': நிர்வாணக் காட்சிகளைப் படமாக்க 3 நாட்கள் பட்டினி இருந்த நடிகர் பிருத்விராஜ் 

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 02, 2024
    04:47 pm

    செய்தி முன்னோட்டம்

    நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன், 'ஆடுஜீவிதம்' திரைப்படத்தில் தனது கதாபாத்திரத்திற்காக கடுமையாக பட்டினி இருந்ததாக சமீபத்தில் வெளியான ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளனர்.

    படத்தின் ஒளிப்பதிவாளர் சுனில் கே.எஸ், அளித்த பேட்டியில் படத்தில் வரும் ஒரு நிர்வாணக் காட்சியை படமாக்குவதற்கு முன்பு மூன்று நாட்கள் பிரித்விராஜ் பட்டினி கிடந்ததாக கூறியுள்ளார்.

    உண்ணாவிரதத்தின் இறுதி நாளில், அவர் தண்ணீர் கூட அருந்தாமல் இருந்தார் எனவும் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

    'ஆடுஜீவிதம்' திரைப்படம், மார்ச் 28 அன்று வெளியானது.

    அந்த குறிப்பிட்ட காட்சியின் படப்பிடிப்பிற்கு முன், பிருத்விராஜ் தனது உடலில் எஞ்சியிருந்த தண்ணீரை வெளியேற்ற, 30ML ஓட்காவை உட்கொண்டதாகவும் சுனில் தெரிவித்துள்ளார்.

    ஆடுஜீவிதம்

    நிர்வாணக் காட்சியில் நடிப்பதில் பிரித்விராஜின் அர்ப்பணிப்பு

    அப்படி கடினமாக பட்டினி கிடந்ததனால், பிரிதிவிராஜை படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு நாற்காலியில் அழைத்துச் செல்லப்பட்டார் எனத்தெரிவித்தார்.

    "ஷாட்டுக்கு முன் அவரை நாற்காலியில் இருந்து தூக்க வேண்டும்" என்று கூறினார்.

    இது, ஆடுஜீவிதம் திரைப்படத்திற்காக, கதாபாத்திரத்திற்காக தன்னை வருத்தி கொண்ட நடிகர் ப்ரித்விராஜின் அர்ப்பணிப்பைக் காட்டுகிறது.

    ஆடுஜீவிதம் திரைப்படம் பென்யாமின் எழுதிய அதே பெயரில் வெளியான புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது.

    இந்த திரைப்படத்தை, மலையாள சினிமாவின் பிரபல இயக்குனர் பிளஸ்ஸி இயக்கியுள்ளார்.

    இப்படம் 15 வருடங்களுக்கும் மேலாக தயாரிப்பில் இருந்தது.

    இது நஜீப் என்ற புலம்பெயர்ந்த தொழிலாளி, ஒரு தொலைதூர சவூதி அரேபிய பண்ணையில் சிறைபிடிக்கப்பட்டு, ஆடு மேய்க்கும் கதையைச் சொல்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மலையாள படம்
    மலையாள திரையுலகம்
    நடிகர்
    திரைப்படம்

    சமீபத்திய

    இந்தியா- பாகிஸ்தான் போர் நிறுத்தம்: இன்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் அமைச்சரவை
    ஜூன் மாதம் முதல் அமேசான் பிரைம் வீடியோவில் Ad free சினிமா கிடையாது! அமேசான் பிரைம்
    இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்ததில் டிரம்பின் 'வர்த்தக' கூற்றை மத்திய அரசு நிராகரித்தது இந்தியா
    'ராஜதந்திரமற்ற செயல்களுக்காக' பாகிஸ்தான் தூதரை இந்தியா வெளியேற்றியது இந்தியா

    மலையாள படம்

    படப்பிடிப்பின்போது நடிகர் பிரித்விராஜிற்கு காயம்; இன்று அறுவை சிகிச்சை என தகவல்  நடிகர்
    ஜெயிலர் vs ஜெயிலர்; ஒரே தலைப்பில், ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்  ஜெயிலர்
    நடிகர் துல்கர் சல்மான் பிறந்தநாள்: அவர் நடிப்பில் வெளியான சூப்பர்ஹிட் திரைப்படங்கள் துல்கர் சல்மான்
    பிரபல மலையாள இயக்குனர் சித்திக் மாரடைப்பால் காலமானார் மலையாள திரையுலகம்

    மலையாள திரையுலகம்

    'பிரெண்ட்ஸ்' பட இயக்குநர் சித்திக் உடல்நிலை கவலைக்கிடம்; ECMO பொறுத்தியுள்ளதாக தகவல் இயக்குனர்
    படங்களை ரீமேக் செய்வது எனக்கு பிடிக்காது: துல்கர் சல்மான் துல்கர் சல்மான்
    தொடர் தோல்வி; மார்க்கெட் இழக்கும் நிவின் பாலி நடிகர்
    அமலாக்கத்துறை ரேடாரில் சிக்கிய நடிகை நவ்யா நாயர் அமலாக்க இயக்குநரகம்

    நடிகர்

    இரண்டு குழந்தைகளை தத்தெடுக்க முடிவு செய்துள்ள நடிகை சமந்தா சமந்தா ரூத் பிரபு
    ஆடை நிறுவனத்தை புதுப்பொலிவுடன் ரீலான்ச் செய்த விஜய் தேவரகொண்டா சமூக வலைத்தளம்
    பிரபுவின் மகளை கரம் பிடிக்கும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குனர்
    "போலியான வருத்தத்திற்கு உண்மையை பலி கொடுக்க முடியாது"- ஞானவேல் ராஜா அறிக்கைக்கு சசிகுமார் கண்டனம் அமீர்

    திரைப்படம்

    அட்லீ தயாரிக்கும் புதிய படம்: வருண் தவணுடன் இணையும் கீர்த்தி சுரேஷ் கீர்த்தி சுரேஷ்
    பொங்கலுக்கு ரஜினி ரசிகர்களுக்கு வெளியாகவுள்ள டபுள் ட்ரீட் ரஜினிகாந்த்
    'அயலான்' ஏலியனுக்கு வாய்ஸ் கொடுக்க சித்தார்த் வாங்கிய சம்பளம் சிவகார்த்திகேயன்
    இன்ஸ்டாவில் காதலனை அறிமுகம் செய்த சாய் பல்லவியின் தங்கை பூஜா நடிகைகள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025