LOADING...
சந்திரயான்-3 தரையிறக்கம் குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் விமர்சனம்; வலுக்கும் கண்டனங்கள் 
சந்திரயான்-3 தரையிறக்கம் குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் விமர்சனம்

சந்திரயான்-3 தரையிறக்கம் குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் விமர்சனம்; வலுக்கும் கண்டனங்கள் 

எழுதியவர் Venkatalakshmi V
Aug 21, 2023
03:10 pm

செய்தி முன்னோட்டம்

சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான நடிகர் பிரகாஷ் ராஜ் —ஆனால், அவர் நடிக்கும் வரையில் மட்டுமே. கடந்த தேர்தல் முதல், அவர் அரசியலில் இறங்கியதும், சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசி, கண்டங்களுக்கு உள்ளாகிறார். ஒரு காலத்தில் அவரின் நடிப்புக்கு ரசிகர்களாக இருந்தவர்கள் கூட அவர் கருத்துக்களை கண்டிக்க துவங்கினர். தற்போது, அதேபோல ஒரு சர்ச்சையான கருத்தை பதிவிட்டு, எதிர்ப்புகளை பெற்று வருகிறார் பிரகாஷ் ராஜ்.

card 2

சந்திரயான் 3 பற்றி விமர்சனம் செய்த பிரகாஷ் ராஜ்

இந்தியாவே எதிர்நோக்கி கொண்டிருக்கும் சந்திரயான் 3 , நிலவில் புதன்கிழமை மாலை தரையிறங்கும் என இஸ்ரோ அறிவித்துள்ளது. ரஷ்யா அனுப்பிய லூனா விண்கலம் நொறுங்கியதை அடுத்து, உலகமே இந்தியாவின் சந்திரயான் 3 -ஐ எதிர்நோக்கி உள்ளனர். இந்நிலையில், "பிரேக்கிங் நியூஸ்:- #விக்ரம்லேண்டர் (sic) மூலம் சந்திரனில் இருந்து வரும் முதல் படம்" தலைப்பிட்டு ஒரு மீம்-ஐ பகிர்ந்துள்ளார் பிரகாஷ் ராஜ்.

ட்விட்டர் அஞ்சல்

பிரகாஷ் ராஜ் ட்வீட்

Advertisement

card 4

பிரகாஷ்ராஜிற்கு எதிராக வலுக்கும் கண்டனங்கள் 

அவரின் இந்த பதிவை, நெட்டிசன்கள் இஸ்ரோ விஞ்ஞானிகளின் கடின உழைப்பை கேலி செய்ததற்காக கண்டிப்பதோடு, அவர் "பிரதமர் நரேந்திர மோடி மீது குருட்டு வெறுப்பைக் காட்டுகிறார் " என்றும் குற்றம் சாட்டியுள்ளனர். ஒரு பயனர், "ஒருவரை வெறுப்பதற்கும் உங்கள் நாட்டை வெறுப்பதற்கும் வித்தியாசம் உள்ளது!" எனக்கூறியுள்ளார். சந்திரயான்-3 ஒரு ISRO திட்டம், எந்த அரசியல் கட்சியுடனும் தொடர்பு இல்லை என்பதை தெளிவுபடுத்திய மற்றொரு பயனர், "இந்த பணி இஸ்ரோவிடமிருந்து வந்தது, பாஜக அல்ல... இது வெற்றியடைந்தால், இது இந்தியாவுக்கானது, எந்த கட்சிக்கும் அல்ல" என்று கருத்து தெரிவித்தார். நடிகர் பிரகாஷ் ராஜ் சர்ச்சையில் ஈடுபடுவது இது முதல் முறை அல்ல - அவரது கடந்தகால சர்ச்சைக்குரிய சம்பவங்களில் சிலவற்றை தெரிந்துகொள்ளுங்கள்.

Advertisement

card 5

பிரகாஷ் ராஜும், அவரின் சர்ச்சையான கருத்துக்களும் 

பிரகாஷ் ராஜ், மத்திய அரசின் இந்தி மொழி திணிப்பிற்கு எதிராக குரல் கொடுத்த விதம் கண்டனங்களை ஈர்த்தது. முன்னதாக மார்ச் மாதம், பிரகாஷ் ராஜ் கன்னடத்தில் "எனக்கு இந்தி தெரியாது, போ!" என்ற செய்தியுடன் டி-சர்ட் அணிந்திருக்கும் படத்தைப் பகிர்ந்துள்ளார். இந்த இடுகையைத் தொடர்ந்து, நடிகர் பிரகாஷ் ராஜ், இந்து விரோத உணர்வுகளைப் பரப்புவதாக பரவலாக குற்றம் சாட்டப்பட்டார். பிரகாஷ் ராஜ், 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்படம் குறித்து கூறிய கருத்தும் பலருக்கு பிடிக்கவில்லை. அந்த திரைப்படத்தை "பிரசாரப் படம்" என்று அவர் குறிப்பிட்டார். 'ஜெய் பீம்' திரைப்படத்தில் அவர் இடம்பெற்றிருந்த காட்சியும் சர்ச்சைக்குள்ளானது.

Advertisement