PRS01: தயாரிப்பாளராகும் பிரதீப் ரங்கநாதன்! மமிதா பைஜு, அஸ்வத் மாரிமுத்து கூட்டணியில் உருவான 'PR Show' முதல் படம்
செய்தி முன்னோட்டம்
'லவ் டுடே' புகழ் இயக்குநரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன், தற்பொழுது தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக தனது புதிய இன்னிங்ஸை தொடங்கியுள்ளார். அவரது சொந்த தயாரிப்பு நிறுவனமான 'பிஆர் ஷோ' அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டு, அதன் முதல் தயாரிப்பான 'PRS01' திரைப்படத்தின் பிரம்மாண்ட அறிமுக வீடியோ மற்றும் ஃபர்ஸ்ட் லுக் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தின் மிக முக்கிய சிறப்பம்சமாக, இதனை ஒரு இயக்குநர் அல்லாமல் 6 இளம் இயக்குநர்கள் இணைந்து இயக்கவுள்ளனர். 'ஆல்ஃபா யூனிட்' என்று அழைக்கப்படும் இந்த இயக்குநர் குழுவில் விஷால் டிஆர், யாஷ் வி, நரேன் சௌதா, சாணக்கியன் ஆர், தனுஷ் குமார் மற்றும் இளம்பரிதி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இப்படத்தின் கதையை பிரதீப் ரங்கநாதனே எழுதியுள்ளார்.
கூட்டணி
மமிதா பைஜு - அஸ்வத் மாரிமுத்து கூட்டணி
பிரதீப் ரங்கநாதனுடன் ஏற்கனவே 'டிராகன்' படத்தில் பணிபுரிந்த அஸ்வத் மாரிமுத்து மற்றும் 'டூட்' படத்தில் நடித்த மமிதா பைஜு ஆகியோர் இதில் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இவர்களுடன் ஸ்வாசிகா, அறிமுக நடிகை அனாமிகா மஹி மற்றும் தெலுங்கு நடிகர் சிவாஜி சோந்தினேனி ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படத்தில் அஸ்வத் மாரிமுத்து ஒரு போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதீப்பின் 'டூட்' படத்திற்கு இசையமைத்த சாய் அபயங்கர் இத்திரைப்படத்திற்கு இசையமைக்கிறார். படத்தின் அறிமுக வீடியோவுடன் சேர்த்து, 132 வினாடிகள் கொண்ட 'Aane Wala Star' என்ற அதிரடியான லிரிக்கல் பாடலையும் படக்குழு யூடியூபில் வெளியிட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Here's the Official Project Announcement & Launch Video of PR Show ❤️#PRS1
— Mamitha Baiju (@_mamithabaiju) July 6, 2026
▶️ https://t.co/zi3WjzdJ6s
Every great journey starts with a first step, and this is ours :)
Written & Directed by The Alpha Unit
Banner : @prshowofficial
Story and Produced by : @pradeeponelife
A… pic.twitter.com/CJTBuFMgrQ