
AR ரஹ்மான் இசையமைப்பில் ராம் சரணின் அடுத்த படத்திற்கு பெயர் 'பெட்டி'!
செய்தி முன்னோட்டம்
தெலுங்கு திரையுலகின் உச்ச நட்சத்திரமான ராம் சரண் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
அதனை முன்னிட்டு அவரது அடுத்த படமான RC 16 படத்தின் பெயரை வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர்.
அதோடு இரண்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களும் வெளியாகின.
பெட்டி (Peddi) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தினை புச்சி பாபு சனா இயக்குகிறார்.
படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் இணைந்து தயாரித்துள்ளன.
அதோடு படத்திற்கு இசையமைத்திருப்பது ஏ.ஆர். ரஹ்மான்.
வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் ராம்சரண் ஒரு வித்தியாசமான கெட்டப்பில், கலைந்த தாடி, நீண்ட கூந்தல் மற்றும் வாயில் ஒரு சுருட்டுடன் தோன்றுகிறார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
A FIGHT FOR IDENTITY!! #RC16 is #Peddi.
— Ram Charan (@AlwaysRamCharan) March 27, 2025
A @BuchiBabuSana film.
An @arrahman musical.@NimmaShivanna #JanhviKapoor @RathnaveluDop @artkolla @NavinNooli @IamJagguBhai @divyenndu @vriddhicinemas @SukumarWritings @MythriOfficial pic.twitter.com/fuSN5IjDL1
விவரங்கள்
'பெட்டி' படத்தின் விவரங்கள்
'பெட்டி' படத்தில் கன்னட நட்சத்திரம் சிவ ராஜ்குமார் மற்றும் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் ஆகியோர் நடிக்கின்றனர்.
இது ஜான்வியின் இரண்டாவது நேரடி தெலுங்கு படமாகும்.
முன்னதாக அவர் ஜூனியர் NTR உடன் தேவரா படத்தில் நடித்திருந்தார்.
இந்தப் படத்தில் ஒளிப்பதிவாளர் ஆர். ரத்னவேலு ஐ.எஸ்.சி., எடிட்டர் நவீன் நூலி மற்றும் தயாரிப்பு வடிவமைப்பாளர் அவினாஷ் கொல்லா உள்ளிட்ட விருது பெற்ற தொழில்நுட்ப வல்லுநர்களின் நிபுணத்துவம் சேர்கிறது.
தற்போது படப்பிடிப்பில் இருக்கும் இப்படத்தின் வெளியீட்டு தேதி எதுவும் அறிவிக்கப்படவில்லை.