சுதந்திர தின ஸ்பெஷல்: விடுதலை வேட்கையை தூண்டும் தமிழ் படங்கள்
இந்தியா இன்று தனது 77-வது சுதந்திர தினத்தை கொண்டாடி வருகிறது. பல்லாயிரக்கணக்கானோர் உயிர் தியாகம் செய்து பெற்ற இந்த சுதந்திரத்தால் தான், நாம் தற்போது இதுபோல சுதந்திரமாக செயலியில் செய்திகளை படிக்க முடிகிறது. நீங்கள் விருப்பப்பட்டதை செய்யும் சுதந்திரம் உங்களுக்கு கிடைக்க காரணமான இந்த நாளில், தமிழ் சினிமாவில் வெளியான சில சுதந்திர வேட்கையை தூண்டு படங்கள் சிலவற்றை பற்றி இங்கே காணலாம். RRR: ஆஸ்கார் விருது வென்ற இந்த திரைப்படம், ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடும் இரு நண்பர்களை பற்றிய திரைப்படம். இரு தனி நபர்கள், இரு வேறு இலட்சியங்கள், இரண்டும் ஒன்றினையும் ஒரு திரைக்கதையை அழகாக புனைந்திருப்பார் இயக்குனர் ராஜமௌலி.
விடுதலை வேட்கையை தூண்டும் திரைப்படங்கள்
ஆகஸ்ட் 16 1947 : கவுதம் கார்த்திக் நடிப்பில் உருவான திரைப்படம் இது. வசூல்ரீதியாக திரைப்படம் வெற்றியடையாவிட்டாலும், அற்புதமான திரைக்கதை என்ற விமர்சனத்தை பெற்றது இத்திரைப்படம். ஹே ராம்: கமல் இயக்கி எழுதிய இந்த திரைப்படம், அவரின் நடிப்பில் உருவான மற்றொரு சுதந்திர போராட்டத்தை பற்றிய திரைப்படம் ஆகும். சிறைச்சாலை: பிரிட்டிஷ் காலத்தில் இருந்த அந்தமான் சிறைச்சாலையும், அதில் நடைபெற்ற அவலங்களை பற்றிய கதை தான் இப்படம். இந்தியன்: சுதந்திர போராட்ட தியாகி, அவர் போராடி வாங்கித்தந்த விடுதலை தவறாக பயன்படுவதை கண்டு வெகுண்டெழும் கதை இந்த திரைப்படம். வீரபாண்டிய கட்டபொம்மன்: சிவாஜி கணேசன் நடிப்பில், வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம், இன்று வரை சுதந்திர தாகத்தை வளர்க்கும் ஒரு திரைப்படமாக கருதப்படுகிறது.