'அந்த 3வது மனுஷி போட்ட ட்வீட்..' த்ரிஷா விவகாரத்தில் வருத்தம் தெரிவித்ததே தவறு என பார்த்திபன் பேச்சு
செய்தி முன்னோட்டம்
த்ரிஷா குறித்து தான் பேசிய பேச்சு சர்ச்சையான நிலையில், இயக்குநர் பார்த்திபன் தனது யூடியூப் பக்கத்தில் விளக்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பல அதிரடியான தகவல்களை அவர் பகிர்ந்துள்ளார். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற பார்த்திபன், "குந்தவை (த்ரிஷா) இப்போது வீட்டுக்குள்ளேயே குந்தவைக்கப்பட்டால் நல்லது" என்று கூறியிருந்தார். இது பெரும் விவாதத்தை கிளப்பிய நிலையில், "மேடையில் விஜய், அஜித் பற்றி பேசிக்கொண்டிருந்தபோது ஒரு புகைப்படம் காண்பிக்கப்பட்டது. அதைப் பார்த்ததும் என்ன பேசுவதென்று தெரியாமல் திகைத்துவிட்டேன். விஜய் தற்போது பல போராட்டங்களைச் சந்தித்து வருகிறார். அந்த திருமண நிகழ்ச்சியில் த்ரிஷா கலந்து கொள்ளாமல் இருந்திருக்கலாம் என்பது எனது அடிமனதில் தோன்றிய எண்ணம். அந்த ஆதங்கத்தில்தான் "வீட்டில் இருந்திருக்கலாம்" என்று கூறினேன்." என்றார்.
காரணம்
வருத்தம் தெரிவித்திருக்க மாட்டேன் - ஏன்?
த்ரிஷா இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததும், பார்த்திபன் முதலில் வருத்தம் தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது அதை மாற்றிக் கொள்ளும் வகையில் பேசியுள்ளார்: தான் வருத்தம் தெரிவித்து வீடியோ வெளியிட இருந்த நேரத்தில், ஒரு '3 ஆம் தர ட்வீட்' வந்ததாகவும், அதில் பார்த்திபனே அந்தப் புகைப்படத்தைப் போடச் சொன்னதாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்ததாகவும் அவர் கூறினார். "இப்படி ஒரு ட்வீட் வரும் என்று தெரிந்திருந்தால் நான் வருத்தமே தெரிவித்திருக்க மாட்டேன். என்னை விடக் கொச்சையாகப் பேசிய அரசியல் கட்சித் தலைவர்களுக்குப் பதில் சொல்லாத த்ரிஷா, எனக்கு மட்டும் கண்டனம் தெரிவித்தது ஏன்?" என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அக்கறை
விஜய் மற்றும் குடும்பம் குறித்த அக்கறை
இந்த விவகாரத்தில் மூன்று நபர்களை முன்னிலைப்படுத்தி பார்த்திபன் பேசியுள்ளார்: 1. தனது அன்பு நண்பர் விஜய். 2. விஜயின் மனைவி சங்கீதா. 3. இதில் சம்பந்தமில்லாத 3வது மனுஷி (த்ரிஷா). ஒரு பெண்ணைப் பற்றித் தவறாகப் பேச வேண்டும் என்ற நோக்கம் தனக்கு இல்லை என்றும், ஆனால் ஒரு தரப்பினர் தன்னைத் தவறாகச் சித்தரிப்பதால் இந்த விளக்கத்தை அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Good night friends https://t.co/pF52GZ8nqi
— Radhakrishnan Parthiban (@rparthiepan) March 9, 2026