Page Loader
ஹிந்தியில் பரியேறும் பெருமாள் ரீமேக்? உரிமையை கைப்பற்றிய கரண் ஜோகர் 
இந்தியில் ரீமேக் ஆகும் பரியேறும் பெருமாள் திரைப்படம்

ஹிந்தியில் பரியேறும் பெருமாள் ரீமேக்? உரிமையை கைப்பற்றிய கரண் ஜோகர் 

எழுதியவர் Siranjeevi
Apr 25, 2023
05:02 pm

செய்தி முன்னோட்டம்

கடந்த 2018 ஆம் ஆண்டில் கோலிவுட் சினிமாவில் மாரி செல்வராஜ் இயக்கத்தில், பா. ரஞ்சித் தயாரிப்பில் வெளியான படம் தான் பரியேறும் பெருமாள். இப்படத்தில் கதிர் ஹீரோவாகவும், கயல் ஆனந்தி ஹீரோயினாகவும் நடித்திருந்தனர். இவர்களோடு யோகிபாபு, மாரிமுத்து உள்ளிட்டோர் நடித்தனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருந்தார். விமர்சன ரீதியாக இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் இந்தி ரீமேக் உரிமையை பாலிவுட் தயாரிப்பாளரான கரண் ஜோஹர் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் அவர் இந்தியில் இப்படத்தை ரீமேக் செய்யு உள்ளதாகவும், ஹீரோவாக சித்தாந்த் சதுர்வேதியும், ஹீரோயினாக திருப்தி திம்ரியும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆண்டு ஜூலை மாதம் இப்படத்தின் வேலைகள் தொடங்கப்பட உள்ளார்களாம்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post