
தென் கொரியா: ஆஸ்கார் வென்ற 'பாராசைட்' திரைப்படத்தின் நடிகர் லீ சன்-கியூன் தற்கொலை
செய்தி முன்னோட்டம்
'பாராசைட்' திரைப்படத்தில் நடித்து பிரபலமான தென் கொரிய நடிகர் லீ சன்-கியூன் புதன்கிழமை ஒரு காரில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.
ஆஸ்கார் விருது பெற்ற 'பாராசைட்' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரமாக நடித்திருந்த லீ சன்-கியூன் புதன்கிழமை(டிசம்பர் 27) காலை சியோலில் உள்ள ஒரு பூங்காவில் காருக்குள் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டார்.
சட்டவிரோத போதைப்பொருள் பயன்பாடு தொடர்பாக அவரை சில மாதங்களாக போலீஸார் விசாரித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால், கடந்த சில மாதங்களாக அவரது பெயர் மாறி மாறி செய்திகளில் வந்து கொண்டிருந்தது.
டவ்க்ஜ்க
தற்கொலை கடிதம் கண்டெடுப்பு
ஆனால், அவர் கிளப்புக்கு சென்றிருந்த போது தெரியாமல் போதைப்பொருளை உட்கொண்டதாக கூறியிருந்தார்.
இந்நிலையில், அவர் புதன்கிழமை வீட்டை விட்டு வெளியேறியதும் தற்கொலைக் கடிதம் ஒன்று இருப்பதை பார்த்த அவரது மனைவி உடனடியாக போலீஸாருக்கு தகவல் அளித்தார்.
இதனையடுத்து, அவர் காருக்குள் இறந்து கிடப்பதை போலீஸார் கண்டுபிடித்தனர்.
லீ சன்-கியூன் 1975 இல் பிறந்து, தென் கொரியாவின் மிக முக்கியமான நடிகர்களுள் ஒருவராக வலம் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
'பாராசைட்' திரைப்படத்தை தவிர, 'ஹெல்ப்லெஸ்', 'ஆல் அபௌட் மை வைஃப்' மற்றும் பல குறிப்பிடத்தக்க படங்களில் அவர் நடித்திருக்கிறார்.