
ஆஸ்கார் பரிந்துரைகள் 2024: போட்டியிடும் படங்கள் எவை உள்ளிட்ட சில முக்கிய தகவல்கள்
செய்தி முன்னோட்டம்
96வது அகாடமி விருதுகளுக்கான பரிந்துரைகள் ஜனவரி 23 இன்று அறிவிக்கப்பட்டன.
ஆஸ்கார் விருதுக்கான பரிந்துரைகள் பட்டியலில் கிறிஸ்டோபர் நோலனின் பிரபலமான 'ஓப்பன்ஹெய்மர்' திரைப்படம் பல பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த படத்துடன் வெளியான 'பார்பி' திரைப்படம், சிறந்த இயக்குனர் மற்றும் நடிகைக்கான பிரிவில் பரிந்துரைக்கப்படவில்லை என்பது அப்படத்தின் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
96வது அகாடமி விருதுகள், இந்திய நேரப்படி, மார்ச் 11 அதிகாலையில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்ச்சியை தொகுப்பாளரும், நகைச்சுவை நடிகருமான ஜிம்மி கிம்மல் தொகுத்து வழங்குவார்.
ட்விட்டர் அஞ்சல்
சிறந்த படத்திற்கான தேர்வுகள்
And the nominees for Best Picture are... #Oscars pic.twitter.com/UFNHnQBZsE
— The Academy (@TheAcademy) January 23, 2024
ட்விட்டர் அஞ்சல்
சிறந்த நடிகருக்கான தேர்வுகள்
The nominations for Actor in a Leading Role go to... #Oscars pic.twitter.com/6LETixc9NY
— The Academy (@TheAcademy) January 23, 2024
ட்விட்டர் அஞ்சல்
சிறந்த இயக்குனருக்கான தேர்வுகள்
Lights, camera, action! Here are your nominees for Directing. #Oscars pic.twitter.com/TSj4Pdre1j
— The Academy (@TheAcademy) January 23, 2024
card 2
ஆஸ்கார் தேர்விற்கு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய விதிகள்
இந்த ஆண்டு முதல், ஆஸ்கார் விருதுகளை வழங்கும் அகாடமி, சிறந்த படங்களுக்கு பரிந்துரைக்கப்படுபவர்களுக்கு பன்முகத்தன்மை விதியைப் பயன்படுத்தியுள்ளது.
இந்த பிரிவில் போட்டியிட, திரைப்படங்கள் நான்கு "பிரதிநிதித்துவம் மற்றும் சேர்த்தல் தரநிலைகளின்" தொகுப்பில் குறைந்தது இரண்டையாவது பூர்த்தி செய்ய வேண்டும் என்ற புதிய விதியை அமல்படுத்தியுள்ளது அகாடமி.
இந்த விதியினால், திரையில் சித்தரிப்பதை அதிகரிப்பதை நோக்கமாக கொண்டது மட்டுமின்றி பன்னெடுங்காலமாக குறைவான பிரதிநிதித்துவம் கொண்ட பெண்கள், LGBTQ+ மற்றும் இனம் சார்ந்த குழுக்கள் மற்றும் குறைபாடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் உள்ள குழுக்களின் வேலைவாய்ப்பை மேம்படுத்தும் என அகாடமி நம்புகிறது.