
இணையத்தில் வைரலாகும் அரிய புகைப்படம்: 'தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்' பொம்மனும், குட்டி யானை ரகுவும்
செய்தி முன்னோட்டம்
சிறந்த குறும்படம் என ஆஸ்கார் விருது வென்ற, திரைப்படம், 'தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்'. இந்த படத்தில் நடித்திருந்த குட்டி யானை ரகுவும், அவனின் பாகனான பொம்மனின் பழைய புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்திய வன சேவை (IFS) அதிகாரி பர்வீன் கஸ்வான், என்பவர் தான் இந்த அரிய புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
இந்த படத்தில், குட்டி யானையான ரகுவை, பொம்மன் கொஞ்சுவது போல உள்ளது.
அறியாதவர்களுக்கு, ரகு எனப்பெயரிடப்பட்ட குட்டி யானை ஒன்று, தனது மந்தையிலிருந்து பிரிந்து, பலத்த காயமடைந்த நிலையில், பொம்மனிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த யானைக்குட்டியை, பொம்மனும், அவர் மனைவியும் பராமரிக்கும் விதத்தை பற்றியது தான், அந்த ஆவணப்படம்.
ட்விட்டர் அஞ்சல்
5 வருடங்களுக்கு முன் பொம்மனும், ரகுவும்
This random five year old click of mine from Mudumalai. Do you recognise them. #ElephantWhisperer pic.twitter.com/MssdghsucB
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) March 29, 2023