Page Loader
'அஜித் 62' பற்றி விக்னேஷ் சிவன் கொடுத்துள்ள புதிய அப்டேட்!
அஜித் மற்றும் விக்னேஷ் சிவன் கூட்டணியில் 'அஜித் 62'

'அஜித் 62' பற்றி விக்னேஷ் சிவன் கொடுத்துள்ள புதிய அப்டேட்!

எழுதியவர் Saranya Shankar
Jan 03, 2023
04:50 pm

செய்தி முன்னோட்டம்

நடிகர் அஜித் நடித்து திரைக்கு வெளிவர இருக்கும் படம் துணிவு. ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படம் வருகிற பொங்கல் தினத்தையொட்டி 2023-ஆம் ஆண்டு ஜனவரி 11ந்தேதி உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் அஜித்துடன் இணைந்து விக்னேஷ் சிவன் அடுத்த படத்தை இயக்கப் போவதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின. இந்த படத்திற்கு அஜித் 62 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தினை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் ஜனவரி 2-ஆம் வாரத்தில் இருந்து மும்பையில் ஆரம்பிக்கப்பட உள்ளதாக படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் இப்படத்தினை பற்றிய புது அப்டேட் இயக்குனர் விக்னேஷ் சிவன் அளித்துள்ளார்.

விக்னேஷ் சிவன்

எனக்கு யாரும் அழுத்தம் கொடுக்கவில்லை - விக்னேஷ் சிவன்

இது ஒரு மாஸ் படமாக இருக்குமா அல்லது இயக்குனரின் வழக்கமான பாணியில் இருக்குமா என்று கேட்ட கேள்விக்கு அவர் பதில் அளித்துள்ளார். "இதுவரை நான் எடுத்த அனைத்து படங்களும் காமெடி கலந்த ரொமான்ஸ் கதையில் தான் உருவாக்கி இருக்கிறது. நான் ஆக்சன் கதைகளை இயக்கியது இல்லை. மேலும் அஜித் 62 படத்தை பொறுத்தவரை எனக்கு படத்தின் நிறுவனம் முழு சுதந்திரம் கொடுத்துள்ளது. அஜித்திற்காக நீங்கள் தயார் செய்யும் கதை எப்படி உருவாக்க வேண்டும் என நினைக்கிறீர்களோ அப்படியே செய்யுங்கள் என தயாரிப்பாளர் கூறியுள்ளார். படம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எனக்கு யாரும் அழுத்தம் கொடுக்கவில்லை. இப்படம் முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் உருவாக்கி இருக்கிறேன். இப்படம் அனைவருக்கும் பிடிக்கும்" என அவர் குறிப்பிட்டுள்ளார்.