Page Loader
நடிகர் விஜய் துவங்க உள்ள அரசியல் கட்சியின் பெயர் இதுவா? இணையத்தில் வைரலாகும் தகவல்
இணையத்தில் வைரலாகும் நடிகர் விஜய் துவங்க உள்ள அரசியல் கட்சியின் பெயர்கள்

நடிகர் விஜய் துவங்க உள்ள அரசியல் கட்சியின் பெயர் இதுவா? இணையத்தில் வைரலாகும் தகவல்

எழுதியவர் Venkatalakshmi V
Jan 29, 2024
08:51 am

செய்தி முன்னோட்டம்

கடந்த வார இறுதியில், தனது தளபதி விஜய் மக்கள் இயக்க உறுப்பினர்கள் உடன் பனையூர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தினார் நடிகர் விஜய். அதில் ஒரு மனதாக, அரசியலில் ஈடுபடுவது என்றும், அதற்கான பணிகளை துவங்க விஜய் பச்சைக்கொடி காட்டியதாகவும் செய்திகள் வெளியாகின. அதனை தொடர்ந்து, சாத்தியமான பெயர்களை தேர்வு செய்து உள்ளனர். இந்த நிலையில், கட்சியின் பெயர் என்னதென்று தற்போது தகவல் வெளியாகியுள்ளது. சமூகவலைத்தளத்தில் பரவிய செய்தியின்படி, தமிழக முன்னேற்ற கழகம், வெல்லும் தமிழக கழகம், தமிழக மக்கள் ஜனநாயக கழகம் என்ற இந்த மூன்று பெயர்களில் ஒன்றைதான் விஜய் தேர்வு செய்யவுள்ளாராம். தேர்வு செய்யப்பட்ட பெயரை ஒரு மாதத்தில் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வார்கள் எனவும் கூறப்படுகிறது.