Page Loader
பாஸ்வேர்டு பகிர்விற்கு கட்டணம்.. நெட்பிளிக்ஸிற்கு பின்னடைவா? 
பாஸ்வேர்டு பகிர்விற்கு கட்டணம் நிர்ணயித்த நெட்பிளிக்ஸ்

பாஸ்வேர்டு பகிர்விற்கு கட்டணம்.. நெட்பிளிக்ஸிற்கு பின்னடைவா? 

எழுதியவர் Prasanna Venkatesh
Apr 28, 2023
11:16 am

செய்தி முன்னோட்டம்

தங்களது சந்தாதாரர் எண்ணிக்கையிலும், வருவாயிலும் பாதிப்பு ஏற்படுத்துவதைத் தொடர்ந்து பாஸ்வேர்டு பகிர்வைக் குறைக்க புதிய நடவடிக்கைகளை எடுக்கத் துவங்கியது நெட்பிளிக்ஸ். அதன் ஒரு பகுதியாக, பாஸ்வேர்டை பகிர்வதற்கு மாதக்கட்டணம் செலுத்தும் வகையிலான புதிய திட்டத்தை கடந்த பிப்ரவரி மாதம் சில நாடுகளில் மட்டும் அறிமுகப்படுத்தியிருந்தது அந்நிறுவனம். முதலில் லத்தீன் அமெரிக்க நாடுகள் சிலவற்றில் மட்டும் பாஸ்வேர்டு பகிர்விற்கு கட்டணம் செலுத்தும் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியிருந்தது நெட்பிளிக்ஸ நிறுவனம். அதனைத் தொடர்ந்து போர்துகல், கனடா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளிலும் அறிமுகப்படுத்தியது. கனடாவில் இந்தப் புதிய திட்டத்தை அமல்படுத்திய பிறகு, அதற்கு முன்பிருந்ததை அதன் கட்டணம் செலுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகத் குறிப்பிட்டிருக்கிறது அந்நிறுவனம்.

நெட்பிளிக்ஸ்

நெட்பிளிக்ஸிற்கு பின்னடைவா? 

இந்தப் புதிய திட்டத்தை ஒவ்வொரு நாட்டில் அமல்படுத்தும் போது அது ஒரு விதமான எதிர்மறை விமர்சனைங்கையே பயனர்களிடமிருந்து பெற்றிருக்கிறது. அதனைத் தொடர்ந்து அந்த நகர்வு நெட்பிளிக்ஸிற்கு நன்மை அளிப்பதாகவே, அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது. ஆனால், அனைத்து நாடுகளிலும் நேர்மறையான முடிவுகள் தான் கிடைத்திருக்கிறதா என்றால், இல்லை என்று தான் சொல்ல வேண்டும். புதிய திட்டத்தை அறிமுகப்படுத்திய பிறகு 1 மில்லியன் ஸ்பானிஷ் பயனாளர்களை ஒரே காலாண்டில் அந்நிறுவனம் இழந்திருக்கிறது. இது அந்நிறுவனத்திற்கு ஒரு சிறிய பின்னடைவு தான். இந்தியாவிலும் பாஸ்வேர்டு பகிர்வைத் தடுக்க அந்நிறுவனம் புதிய திட்டங்களை செயலபபடுத்தும் முடிவில் இருக்கிறது. அது இந்தியாவில் என்ன விதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.