காதலில் விழுந்த தருணத்தை பற்றி முதன்முறையாக மனம் திறந்த நயன்தாரா- விக்னேஷ் சிவன்
செய்தி முன்னோட்டம்
நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன், நெட்ஃபிலிக்ஸ் வெளியாகவுள்ள நயன்தாரா: பியோண்ட் தி ஃபேரிடேல் என்ற புதிய ஆவணப்படத்தில் தங்கள் காதல் கதையை பகிர்ந்துள்ளனர்.
இதற்கான கிளிப் ஒன்றை Netflix தற்போது பகிர்ந்துள்ளது.
இந்த ஆவண படம், வரும் நவம்பர் 18 ஆம் தேதி நெட்ஃபிலிக்ஸ் இல் வெளியிடப்படும்.
அதில் சின்னத்திரையில் VJ வாக தனது பயணத்தை ஆரம்பித்து, செகண்ட் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் நுழைந்து, தன்னுடைய திறமையாலும், உழைப்பாலும் தென்னிந்தியாவின் லேடி சூப்பர்ஸ்டார் என ஆதிக்கம் செலுத்தும் நயன்தாராவின் தொழில் மற்றும் தனிப்பட்ட வழக்கை பற்றிய பயணம் இடம்பெற்றிருக்கும்.
பிளாஷ்பேக்
'காதம்பரி' காதலில் விழுந்த தருணம்
அந்த வீடியோவில் நயன்தாரா கூறுகையில், "ஒரு நாள் பாண்டிச்சேரி சாலைகளில் ஒரு காட்சியை ஷூட் செய்து கொண்டிருந்தோம். சாலைகள் மற்றும் அனைத்தும் சுத்தம் செய்யப்பட்டதால், நான் என் ஷாட்டுக்காக சாலையில் உட்கார்ந்து கொண்டிருந்தேன். மேலும் விக்கி, விஜய் சேதுபதியுடன் ஒரு ஷாட் செய்து கொண்டிருந்தார்..."
"எனக்குத் தெரியாது, ஏதோ விசித்திரமான காரணத்திற்காக, திடீரென்று, நான் அவரைப் பார்த்தேன். நான் அவரை வேறு விதமாகப் பார்த்தேன். நான் முதலில் நினைத்தது, அவர் ஒரு கியூட்டான பையன்...பின்னர், அவர் காட்சிகளை விளக்கும் விதம், அவர் இயக்குநராக செயல்படும் விதம் போன்றவற்றையும் கவனித்தேன்" என்றார்.
காதல் சொன்ன தருணம்
நயன்தாரா காதலை கூறிய தருணம்
விக்னேஷ் சிவன்,"படப்பிடிப்பு முடிந்ததும், அவர்(நயன்தாரா), 'உங்களிடம் ஒன்று வேண்டும். நான் செட்டில் இருப்பதை மிஸ் செய்கிறேன்' என்று கூறினார். நானும் அவரிடம், 'ஆமாம், நானும் செட்டில் இருப்பதை மிஸ் செய்கிறேன்' என்று சொன்னேன். நான் பொய் சொல்ல மாட்டேன், எந்த பையனும் அழகாக இருக்கும் பெண்ணை பார்த்து மனதிற்குள் பாராட்டுவான். ஆனால், நயன் மேடத்தை அப்படி நான் பார்த்ததே இல்லை" என்றார்.
நயன்தாரா மேலும் கூறுகையில், "நான் உண்மையில் ஒரு படி முன்னே செல்வது இதுவே முதல் முறை. நாங்கள் வேறு விதமாக பேச முடியும் என்பதை நாங்கள் புரிந்துகொண்டோம்" என்று தான் காதலை ப்ரொபோஸ் செய்த தருணத்தை விளக்கினார்.
தொழில்
தொழில் முறையில் இருவரும் பிஸியாக உள்ளனர்
நயன்தாரா மற்றும் விக்னேஷ் திருமணம் ஜூன் 9, 2022 அன்று மகாபலிபுரத்தில் நடைபெற்றது.
இவர்களது திருமணத்தில் ஷாருக்கான், ரஜினிகாந்த், ஏ.ஆர்.ரஹ்மான், சூர்யா, விஜய் சேதுபதி, அட்லி மற்றும் திரையுலகைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.
தற்போது இந்த தம்பதிக்கு உயிர், உலகம் என இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர்.
நயன்தாரா தற்போது டெஸ்ட், தனி ஒருவன் 2, கவினின் பெயரிடப்படாத படம் என பல படங்களில் நடித்து வருகிறார்.
மறுபுறம் விக்னேஷ் சிவன், பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்ற படத்தை இயக்கி வருகிறார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Kaadhal aasai yaarai vittadho 🥰
— Netflix India South (@Netflix_INSouth) November 14, 2024
Watch Nayanthara: Beyond The Fairytale on 18 November, only on Netflix! #NayantharaOnNetflix pic.twitter.com/hyVb8a2zu1