
மும்பையில் விக்கி-நயன் ஜோடி; வைரலாகும் புகைப்படங்கள்
செய்தி முன்னோட்டம்
நடிகை நயன்தாராவும், அவரது கணவர் விக்னேஷ் சிவனும், தற்போது மும்பையில் முகாமிட்டுளார்கள் போலும். அங்கிருக்கும் உணவகம் ஒன்றிலிருந்து இருவரும் வெளியே வருவது போன்ற புகைப்படம் ஒன்று, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகை நயன்தாரா, அட்லீ இயக்கத்தில் ஜவான் படத்தில், ஷாருக்கானுடன் நடிக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே.
அந்த நட்பின் காரணமாகதான், நயன்தாரா திருமணத்தில்,ஷாருக்கான் கலந்து கொண்டார்.
அதன் பின்னரும், நயனின் குழந்தைகளையும், அட்லீயின் குழந்தையையும் காண வந்திருந்தார்.
தற்போது, நயன்தாரா, ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் தரும் படங்களை தேர்வு செய்து வருகிறார். அதோடு அவரும்-விக்கியும் இணைந்து உருவாக்கிய 'ரவுடி பிக்ச்சர்ஸ்' தயாரிப்பு நிறுவனத்தையும் கவனித்து வருகிறார்.
ட்விட்டர் அஞ்சல்
மும்பையில் நயன்தாரா
#Nayanthara and #VigneshShivan were spotted in the Mumbai city last night, as they paid a visit to their friend. pic.twitter.com/i4AHxyC48p
— KARTHIK DP (@dp_karthik) March 6, 2023
விக்கி-நயன்
தொடர் சோதனையில் சிக்கும் நயன்-விக்கி தம்பதி
நடிகை நயன்தாரா, இரு பெரும் தயாரிப்பு நிறுவனங்களின் படங்களில் கமிட்டாகியிருந்தார். அதற்காக அட்வான்சும் வாங்கி இருந்தார். ஆனால், சில காரணங்களால் அந்த படத்தில் அவர் நடிக்க முடியாமல் போகவே, தரப்பட்ட அட்வான்ஸ் தொகையும் திரும்ப வாங்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
மறுபுறம், நயன்தாராவின் சமீபத்திய படங்கள் எதுவும் சரியாக ஓடவில்லை.
விக்னேஷ் சிவன் நிலைமையும் அதே போல தான். அவர், அஜித்குமாரை இயக்குவதாக அறிவிக்கப்பட்ட, பின்னர் பல காரணங்களினால் அந்த படத்தில் இருந்து நீக்க பட்டார்.
ஆனால், இந்த பிரச்சனைகள் எதுவும் அவரகள் இருவரையும் பாதிக்காதது போல, இருவரும், செம கூலாக இருப்பதை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.