மூக்குத்தி அம்மன் 2: மீண்டும் அம்மனாக நடிக்க உள்ளார் நயன்தாரா
2020ஆம் ஆண்டு ஆர்.ஜே.பாலாஜி இயக்கி நடித்த திரைப்படம் மூக்குத்தி அம்மன் ஆகும். இது தான் ஆர்.ஜே.பாலாஜி இயக்கிய முதல் திரைப்படமாகும். இப்படத்தில் நடிகை நயனதாரா அம்மன் வேடத்தில் நடித்திருந்தார். இது பெரும் வெற்றி பெற்ற நிலையில், இப்படத்தின் 2ஆம் பாகத்தை எடுக்க படக்குழு தயாராகி வருகிறது. முதலில், மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்க உள்ளார் என்றும், அதில் அம்மன் கதாபாத்திரத்தில் நடிகை திரிஷா நடிப்பார் என்றும் செய்திகள் வெளியாகின. தற்போது வெளியாகி உள்ள தகவலின்படி, நயனதாரா இப்படத்தில் அம்மன் வேடத்தில் நடிக்கவுள்ளார். ஆனால், இப்படத்தின் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி இல்லை என்று கூறப்படுகிறது. நடிகை திரிஷாவை வைத்து மாசாணி அம்மன் என்ற இன்னொரு திரைப்படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்கி வருகிறார் என்று பேசப்படுகிறது.