Loading...
நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் 2 படப்பிடிப்பு BTS வீடியோ வெளியீடு: நவம்பர் 6 ரிலீஸ்
நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் 2 படப்பிடிப்பு BTS வீடியோ வெளியீடு

நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் 2 படப்பிடிப்பு BTS வீடியோ வெளியீடு: நவம்பர் 6 ரிலீஸ்

எழுதியவர் Vasuki
Nov 02, 2026
04:08 pm

செய்தி முன்னோட்டம்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில், முன்னணி இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியுள்ள மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தின் கலகலப்பான படப்பிடிப்பு தளக் காட்சிகளை உள்ளடக்கிய பிரத்யேக BTS வீடியோவை தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் வெளியிட்டுள்ளது. ஐந்து மொழிகளில் திரைக்கு வரத் தயாராகிவிட்ட இப்படத்தின் படப்பிடிப்பு சுவாரசியங்கள் மற்றும் மேக்கிங் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி ரசிகர்களின் ஆர்வத்தை எகிற வைத்துள்ளது.

ஓடிடி தளம்

சுந்தர்.சி இயக்கத்தில் உருவான இரண்டாம் பாகம்

கடந்த 2020-ஆம் ஆண்டு நயன்தாரா நடிப்பில், ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றியைப் பதிவு செய்த மூக்குத்தி அம்மன் படத்தின் தொடர்ச்சியாக இந்த இரண்டாம் பாகம் உருவாக்கப்பட்டுள்ளது.

முதல் பாகத்தை ஆர்.ஜே. பாலாஜி இயக்கியிருந்த நிலையில், கமர்ஷியல் மற்றும் காமெடி ஜானரில் முத்திரை பதித்த இயக்குநர் சுந்தர்.சி இப்படத்தை இயக்கியுள்ளார்.

நயன்தாராவுடன் இணைந்து ரெஜினா கசாண்ட்ரா, அபிநயா, ஊர்வசி, யோகிபாபு, மைனா நந்தினி, துனியா விஜய், சிங்கம்புலி உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே இதில் இடம்பெற்றுள்ளது.

வேல்ஸ் ஃபிலிம்ஸ் சார்பில் ஐசரி கே. கணேஷ் தயாரித்துள்ள இப்படத்திற்கு குஷ்பு சுந்தர் மற்றும் விக்னேஷ் சிவன் இணைத் தயாரிப்பாளர்களாகப் பணியாற்றியுள்ளனர்.

ஹிப் ஹாப் தமிழா ஆதி பின்னணி இசையமைத்துள்ளார்.

வைரலாகும் பிடிஎஸ் வீடியோ

நவம்பர் 6 ரிலீஸ்

சமீபத்தில் வெளியாகி இணையத்தில் ட்ரெண்டான டிரெய்லரை தொடர்ந்து படக்குழுவினர் நாடு தழுவிய அளவில் விளம்பரப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர்.

இதன் ஒரு பகுதியாக வெளியிடப்பட்டுள்ள மேக்கிங் வீடியோவில், நயன்தாராவின் அம்மன் தோற்ற ஒப்பனை, சுந்தர்.சியின் காட்சி அமைப்பு வழிகாட்டல்கள் மற்றும் நட்சத்திரங்களின் ஜாலியான படப்பிடிப்புத் தருணங்கள் விரிவாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

மூக்குத்தி அம்மன் 2 திரைப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வரும் நவம்பர் 6-ஆம் தேதி திரையரங்குகளில் உலகம் முழுவதும் வெளியாகவுள்ள நிலையில், குடும்பங்கள் கொண்டாடும் பக்தி மற்றும் காமெடி விருந்தாக இது அமையும் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT