
நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்திலிருந்து அன்னபூரணி திரைப்படம் நீக்கம்
செய்தி முன்னோட்டம்
நயன்தாரா, ஜெய் மற்றும் சத்யராஜ் முன்னணி வேடங்களில் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் 'அன்னபூரணி'.
படம் வசூல் ரீதியாக பெரிதாக வெற்றி அடையவில்லை என்றாலும், ஓடிடியில் இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் சில தினங்களுக்கு முன்னர் இந்த திரைப்படம் வெளியானது.
எனினும், இந்த திரைப்படத்தில் மத உணர்வுகளை புண்படுத்தும் விதத்தில் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக டெல்லியை சேர்ந்த நபர் ஒருவர் புகார் அளித்திருந்தார்.
அந்த புகாரில், நயன்தாரா, ஜெய் மற்றும் படநிறுவனத்தின் மீது வழக்கு தொடர வேண்டும் என கோரியிருந்தார்.
இதனை அடுத்து, படத்தை ஓடிடி தளத்திலிருந்து நீக்கியுள்ளது பட நிறுவனம்.
சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டு, மீண்டும் ஓடிடியில் வெளியிடப்படும் என அந்நிறுவனம் கூறியுள்ளது
ட்விட்டர் அஞ்சல்
அன்னபூரணி திரைப்படம் நீக்கம்
#CinemaUpdate | நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் இருந்து ‘அன்னபூரணி’ படம் நீக்கம்!#SunNews | #Annapoorani | #Nayanthara | #Netflix pic.twitter.com/orfPdQxiWK
— Sun News (@sunnewstamil) January 11, 2024