Page Loader
'பேட்ட' பட வில்லன் நடிகர் மீது, பகீர் குற்றச்சாட்டை கிளம்பியுள்ள அவரின் வீட்டு உதவியாளர்
'பேட்ட' பட நடிகரின் மீது, வீட்டு உதவியாளர் கிளம்பியுள்ள பகீர் குற்றச்சாட்டு

'பேட்ட' பட வில்லன் நடிகர் மீது, பகீர் குற்றச்சாட்டை கிளம்பியுள்ள அவரின் வீட்டு உதவியாளர்

எழுதியவர் Venkatalakshmi V
Feb 20, 2023
07:28 pm

செய்தி முன்னோட்டம்

'பேட்ட' படத்தின் வில்லன் நடிகர், நவாசுதீன் சித்திக். அவர் ஹிந்தி படவுலகில் பிரபலமான நடிகர். சமீப காலமாக அவர் பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். நவாஸுதீன் சித்திக்கின் மனைவி ஆலியா சித்திக். இருவருமே நீண்ட நாள் காதலித்து, லிவ்- இன் ரிலேஷன்னில் இருந்துள்ளனர். அதன் பின்னர் திருமணம் செய்துகொண்டுள்ளனர். இருவருக்குமே, முதல் திருமணம் தோல்வியில் முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, இவர்கள் இருவரும் இவ்விருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிவது என முடிவெடுத்த பின்னர் தான் பிரச்சனை ஆரம்பித்தது. சித்திக்கின் மனைவி ஆலியாவிற்கும், சித்திக்கின் தாயாருக்கும், சொத்து தகராறு நடைபெற்று வருவதாகவும், இந்த பிரச்சனை முடிவுக்கு வரும் வரையில், நடிகரும், அவரது தாயாரும், வீட்டை காலி செய்துவிட்டு, ஹோட்டலில் தங்கியுள்ளதாகவும் செய்திகள் தெரிவித்தன.

ட்விட்டர் அஞ்சல்

நவாசுதீன் சித்திக் மேல் உதவியாளர் கூறும் குற்றச்சாட்டு

பாலிவுட்

மனைவியுடன் கருத்து வேறுபாடு

இந்நிலையில், சித்திக்கின் மனைவி ஆலியா, நடிகரின் குடும்பத்தார் தன்னை துன்புறுத்துவதாகவும், உணவும், உறங்கவும், கழிப்பிடத்தை உபயோகிப்பதற்கும் தடை விதிப்பதாகவும் குற்றச்சாட்டை முன்வைத்தார். அதே போல ஒரு குற்றச்சாட்டை, சித்திக்கின் உதவியாளர் கூறி இருப்பதாக, ஆலியாவின் வழக்கறிஞர் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதனுடன் ஒரு வீடியோ ஆதாரத்தையும் இணைத்திருந்தார். உணவும்,உறைவிடமும் இன்றி, கையில் பணமும் இன்றி அந்த பணிப்பெண் துபாயில் அகப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இந்த செய்தி வைரல் ஆனதும், நடிகரின் ஆட்கள், அந்த பெண்ணை தொடர்பு கொண்டு, இந்தியா கொண்டு வர ஆவண செய்துவிட்டதாக செய்திகள் தற்போது தெரிவிக்கின்றன. இது பற்றி நடிகரின் தரப்பில் எந்த ஒரு விளக்கமும் இது வரை தரப்படவில்லை.

ட்விட்டர் அஞ்சல்

காப்பாற்றப்பட்ட பணிப்பெண்