நாக சைதன்யா-ஷோபிதா துலிபாலாவின் திருமண கொண்டாட்டங்கள் துவக்கம்; வெளியான புகைப்படங்கள்
செய்தி முன்னோட்டம்
பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை ஷோபிதா துலிபாலாவின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்கள் துவங்கி விட்டது.
தெலுங்கு பாரம்பரிய முறைப்படி, பாரம்பரிய பசப்பு தாட்சணம் (மஞ்சள் இடித்து பூசும்) விழாவுடன் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளன.
இந்த நிகழ்வின் வண்ணமயமான புகைப்படங்களை மணமகள் ஷோபிதா துலிபாலா தனது சமூக ஊடகங்களில் வெளியிட்டார்.
நாக சைதன்யாவுக்கும் ஷோபிதா துலிபாலாவுக்கும் கடந்த ஆகஸ்ட் மாதம், அவரது இல்லத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது.
நிச்சயதார்த்தத்தை குறித்து நாக சைதன்யாவின் தந்தை நாகர்ஜூனா அக்கினேனி அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
மணமகள் உடை
விழாவில் ஷோபிதா தூலிபாலாவின் பாரம்பரிய தோற்றம்
கோதுமா ராய்/பசுப்பு தஞ்சடம் விழா மணமகன் மற்றும் மணமகன் இருவரின் வீடுகளிலும் திருமண விழாக்களின் தொடக்கத்தைக் குறிக்கிறது.
தம்பதிகள் கோதுமை, மஞ்சள் மற்றும் மற்ற சில மங்கள பொருட்களை ஒன்றாக உலக்கையில் இடித்து, உரலில் அரைக்கும் ஒரு குறியீட்டு சடங்கு இதுவாகும்.
ஷோபிதா தூலிபாலா பாரம்பரிய நகைகளுடன், அழகிய ஆரஞ்சு நிற பட்டு சேலை அணிந்திருந்தார். தலைமுடியை எளிமையாக பின்னி அலங்கரித்திருந்தார்.
நெருங்கிய உறவினர்களுடன் இந்த சடங்குகள் நடைபெற்றுள்ளது.
இந்த நட்சத்திர நடிகர்கள் முதலில் 2022இல் நாகசைதன்யாவின் ஹைதராபாத் இல்லத்தில் ஒன்றாகக் காணப்பட்ட புகைப்படங்கள் வெளியான போது இவர்களின் டேட்டிங் வதந்திகள் முதன்முதலில் வெளியானது.
இந்த ஜோடி பின்னர் மார்ச் 2023இல் லண்டனில் ஒன்றாகக் காணப்பட்டது, இந்த வதந்தியை மேலும் தூண்டியது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Chaitanya, Sobhita's wedding prep begins with a 'Pasupu Danchatam'
— greatandhra (@greatandhranews) October 21, 2024
🖼️ https://t.co/4M5N3uC4R4 pic.twitter.com/r1dCOqWnez