Page Loader
"Where is Pushpa ?": இணையத்தில் வைரலாகும் புஷ்பா-2வின் டீஸர் அப்டேட்
வெளியானது புஷ்பா 2 டீஸர் அப்டேட்

"Where is Pushpa ?": இணையத்தில் வைரலாகும் புஷ்பா-2வின் டீஸர் அப்டேட்

எழுதியவர் Venkatalakshmi V
Apr 05, 2023
01:46 pm

செய்தி முன்னோட்டம்

சென்ற ஆண்டு வெளியான திரைப்படங்களிலேயே அதிக வசூல் பெற்ற பேன் இந்தியா திரைப்படத்தில் ஒன்று தான் 'புஷ்பா' திரைப்படம். இந்த திரைப்படத்தில், அல்லு அர்ஜுன், ரஷ்மிக்கா, பஹத் பாசில் ஆகியோர் நடித்திருந்தனர். இந்நிலையில், படத்தின் இரண்டாம் பாகத்திற்க்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்காக விசாகபட்டினத்திற்கு சமீபத்தில் அல்லு அர்ஜுன் சென்றிருந்தார் எனவும் செய்திகள் வெளியாகின. இதனை அடுத்து, படத்தை குறித்த அப்டேட் எதுவும் வெளிவரவில்லை என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். அவர்கள் கேள்விக்கு விடையாக, "Where is Pushpa?" என தலைப்பிட்டு ஒரு வீடியோவை படத்தின் தயாரிப்பாளர் குழு வெளியிட்டுள்ளது. கேள்விக்கான விடையை வரும் ஏப்ரல் 7, அல்லு அர்ஜுன் பிறந்தநாளை ஒட்டி வெளியிடுவோம் எனவும் அறிவித்துள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

புஷ்பா 2 டீஸர் அப்டேட்