Page Loader
ஆட்டோ டிரைவராக மாறிய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்! என்ன நடந்தது?
ஆட்டோ டிரைவர் சந்தோஷ் நாராயணன்

ஆட்டோ டிரைவராக மாறிய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்! என்ன நடந்தது?

எழுதியவர் Venkatalakshmi V
May 10, 2023
06:26 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களுள் ஒருவர் சந்தோஷ் நாராயணன். பா.ரஞ்சித் இயக்கிய 'அட்டகத்தி' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் சந்தோஷ் நாராயணன். அதன் பின்னர், காலா, கபாலி, இறைவி என பல வெற்றி படங்களுக்கு அவர் தான் மெட்டமைத்தார். அவரின் வித்தியாசமான இசை மட்டுமின்றி அவரின் குரலும், தற்போதுள்ள இளைஞர்களை வெகுவாக கவர்ந்தது. பா.ரஞ்சித், கார்த்திக் சுப்புராஜ் போன்ற இளம் தலைமுறை இயக்குனர்களுடன் கை கோர்த்து பயணித்த சந்தோஷ், 'தசரா' என்ற படத்தின் மூலம் தெலுங்கு படவுலகில் அறிமுகமாகியுள்ளார் அவர் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதில் அவர் ஆட்டோ ஓட்டுகிறார். தன்னுடைய இசைக்குழுவினரை பிக்அப் செய்வதாக அந்த வீடியோவில் மேலும் தெரிவித்தார்.

Instagram அஞ்சல்

சந்தோஷ் நாராயணன் பதிவு