தமிழ் திரையுலகில் பேரதிர்ச்சி! பிரபல இசையமைப்பாளர் தேவா காலமானார்
செய்தி முன்னோட்டம்
தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான தேனிசைத் தென்றல் தேவா மாரடைப்பால் காலமானார். 90-களின் காலகட்டத்தில் தமிழ் திரைப்பட இசையில் தனக்கென தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இசையமைப்பாளர் தேவா உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலமானார். இவரது திடீர் மறைவு செய்தி, தமிழ் திரையுலகினரையும் அவரது கோடிக்கணக்கான இசை ரசிகர்களையும் பேரதிர்ச்சியிலும் ஆழ்ந்த துயரத்திலும் ஆழ்த்தியுள்ளது. இசையமைப்பாளர் தேவாவின் மறைவுச் செய்திதைத் தொடர்ந்து, திரைத்துறை பிரபலங்கள், நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைப் பதிவு செய்து வருகின்றனர். குறிப்பாகத் தமிழ் சினிமாவில் கானா பாடல்களைப் பிரபலப்படுத்தி, பாமர மக்களின் மனங்களிலும் இடம்பிடித்தது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
இசையமைப்பாளர் தேவா காலமானார் 💔#SunNews | #RIPDeva | #Deva pic.twitter.com/va98WVHWX8
— Sun News (@sunnewstamil) October 17, 2026