24 மணி நேரத்தில் யூடியூப்பில் அதிகம் பார்க்கப்பட்ட தென்னிந்திய படங்களின் டிரெய்லர் பட்டியல் இதோ!
உலக அளவில் யூடியூப் அதிக மக்களால் பார்க்கப்படும் தளங்களில் ஒன்றாகும். 200 கோடி தடவைக்கு மேல் இந்த தளத்தை தினமும் பார்வையிடுவதாக தரவுகள் கூறுகின்றன. மேலும் உலகம் முழுவதும் தினமும் ஒரு மில்லியன் மணி நேரங்கள் பார்வையாளர்களால் யூடியூப் வீடியோக்கள் பார்க்கப்படுகின்றன. அந்த வகையில் திரைப்படங்களின் ட்ரைலர்கள் மற்றும் டீஸர்கள் வீடியோக்களும் யூடியூபில் ரசிகர்களால் ஈர்க்கப்பட்டு கொண்டாடப்படுகிறது. அவ்வாறு வெளியிடப்பட்ட ட்ரைலர்களில் அதிக தடவை பார்க்கப்பட்ட படங்களின் பட்டியலை பின்வருமாறு பாப்போம். இந்தப் பட்டியலில் முதல் இடத்தைப் பெற்றுள்ள படம் துணிவு. பொங்கலுக்கு வெளிவரவிருக்கும் இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி சில மணி நேரங்களிலேயே 30.32 மில்லியன்-வியூஸ் பெற்றுள்ளது. யூடியூபில் அதிகம் பார்க்கப்பட்ட தென்னிந்திய படத்தின் ட்ரைலர்களில் முதல் இடத்தில உள்ளது.
துணிவு படத்திற்கு அடுத்து அதிக தடவை பார்க்கப்பட்ட படங்களின் ட்ரைலர் என்னென்ன ?
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த 'பீஸ்ட் ' திரைப்படம் 29.08 மில்லியன் வியூஸ் பெற்றது. மகேஷ் பாபு நடிப்பில் வெளிவந்த படம் சர்க்காரு வாரி பட்டா. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் 26.77 மில்லியன் வியூஸ் பெற்றது. அடுத்தாக பிரபாஸ் நடிப்பில் வெளிவந்த ராதே ஷியாம் திரைப்படமாகும். ராதா கிருஷ்ணகுமார் இப்படத்தை எழுதி இயக்கினார். பிரபாஸ்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளனர். இந்த திரைப்படம் 23.20 மில்லியன் வியூஸ் பெற்றுள்ளது. இதனையடுத்து கொரடலா சிவா எழுதி இயக்கிய தெலுங்கு படம் ஆச்சார்யா. இப்படத்தில் சிரஞ்சீவி, ராம் சரண், பூஜா ஹெக்டே ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் 21.86 மில்லியன் வியூஸ் பெற்றது.