3 நாட்களில் 10 கோடி வசூல்: திரையரங்குகளில் மாஸ் காட்டும் மூக்குத்தி அம்மன் 2
செய்தி முன்னோட்டம்
நடிகை நயன்தாரா நடிப்பில் இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான மூக்குத்தி அம்மன் 2 திரைப்படம், தனது மூன்றாவது நாளான முதல் ஞாயிற்றுக்கிழமையன்று வசூலில் 87.8 சதவீத உயர்வைப் பதிவு செய்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் இப்படத்தின் நிகர வசூல் 8.93 கோடி ரூபாயைக் கடந்துள்ளது. சூர்யாவின் சீன் திரைப்படத்தின் போட்டிகளுக்கு மத்தியிலும், விடுமுறை தினமான நேற்று ஒரே நாளில் மட்டும் இப்படம் இந்தியா முழுவதும் 4.60 கோடி ரூபாய் நிகர வசூலை ஈட்டியுள்ளது. மொத்த வசூல் கணக்கீட்டில் படம் தற்போது 10.35 கோடி ரூபாயை எட்டியுள்ளது.
திரையரங்கு வருகை
தமிழ் பதிப்பின் ஆதிக்கம்
திரைப்பட வர்த்தக ஆய்வுகளின்படி, மூன்றாவது நாளில் தமிழ் பதிப்பு மட்டுமே 4.40 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. தெலுங்கு பதிப்பிலிருந்து 20 இலட்சம் ரூபாய் கிடைத்துள்ளது.
ஒட்டுமொத்தமாகத் தமிழ் பதிப்பு இதுவரை 8.45 கோடி ரூபாய் நிகர வசூலை ஈட்டி முதலிடத்தில் உள்ளது.
ஞாயிற்றுக்கிழமையன்று திரையரங்குகளில் சராசரியாக 58.58 சதவீதப் பார்வையாளர் வருகை பதிவானது. குறிப்பாக இரவுக் காட்சிகளில் 73.23 சதவீத இடங்கள் நிரம்பின.
நேற்று ஒரே நாளில் சுமார் 3.91 இலட்சம் நுழைவுச்சீட்டுகள் விற்பனையான நிலையில், மூன்று நாள்களில் மொத்த விற்பனை 7.67 இலட்சத்தைக் கடந்துள்ளது.
படக்குழு விவரம்
மாநில வாரியான வசூல்
மாநில வாரியான கணக்கீட்டில், தமிழகத்தில் மட்டுமே நேற்று 4.65 கோடி ரூபாய் மொத்த வசூலாகப் பதிவாகியுள்ளது.
ஆந்திரா மற்றும் தெலுங்கானா இணைந்து 25 இலட்சம் ரூபாயும், கர்நாடகா 22 இலட்சம் ரூபாயும், கேரளா 18 இலட்சம் ரூபாயும் ஈட்டியுள்ளன.
நயன்தாரா இரட்டை வேடத்தில் நடித்துள்ள இப்படத்தில் ரெஜினா கெசாண்ட்ரா, துனியா விஜய், ஊர்வசி, அபினயா, இனியா மற்றும் ராமச்சந்திர ராஜு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
மேலும் சினேகா மற்றும் குஷ்பு ஆகியோர் சிறப்புத் தோற்றத்தில் தோன்றியுள்ளதும் குடும்ப ரசிகர்களைத் திரையரங்குகளை நோக்கி ஈர்க்க முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.