"பணம், பெயர், புகழை விட நடிப்பு தான் முக்கியம்" சமந்தா பேட்டி
மாஸ்கோவின் காவிரி படத்தின் மூலமாக திரை உலகத்திற்கு அறிமுகமாகி தென் இந்தியாவில் ஒரு தனி பெரும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் நடிப்பில் வெளிவந்த அனைத்து படங்களும் ரசிகர்களிடையே எதிர்ப்பார்ப்பை பெரும். சமந்தா நாகர்ஜுனாவின் மகனான தெலுங்கு நடிகர் நாக சைத்னயாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்களிடையே வேறுபாடு காரணமான இருவரும் பிரிந்து விட்டனர். இதன் பிறகு தன் கேரியரில் கவனம் செலுத்தி வந்த சமந்தா பல படங்களில் கமிட்டாகி நடித்து வந்திருந்தார். சமீபத்தில் அவர் நடித்து வெளிவந்த யசோதா திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
"நானே எனக்கு மிகப்பெரிய விமர்சகர்" - சமந்தா
இந்நிலையில் தான், தான் மயோசிட்டிஸ் எனும் அரிய வகை நோயினால் பாதிக்கப் பட்டு இருப்பதாகவம் மேலும் விரைவில் குணமடைந்து நலமுடன் திரும்புவேன் என்றும் தனது சமூகவலை பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இது இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் எனக்கு பயங்கரமாக கோபம் வரும் அப்போது எல்லாம் நான் ஜிம்முக்கு போய் உடற்பயிற்சி செய்வேன் இதனால் எனக்கு கோபம் குறைந்து விடும் என்று கூறியுள்ளார். மேலும் எனக்கு பணம், பெயர் மற்றும் புகழ் போன்றவை முக்கியமானது அல்ல. நடிப்பு தான் எனக்கு முக்கியம், ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் நேசித்து நடிக்கிறேன். அவ்வாறு நேசிக்க முடியாத எந்த வேலையிலும் சந்தோசம் இருக்காது. நானே எனக்கு மிகப்பெரிய விமர்சகர் என்று சமந்தா கூறியுள்ளார்.