
மூன்றாம் முறையாக ரிச்சர்டை நாயகனாக்கும் மோகன்.ஜி
செய்தி முன்னோட்டம்
தற்போது வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'பகாசூரன்' படத்தை தொடர்ந்து, மோகன்.ஜி அடுத்த படத்தை இயக்க தயாராகி வருகிறார்.
இந்த படத்தின் நாயகனை தற்போது அறிவித்துள்ளார் இயக்குனர். இது தொடர்பாக தனது பேஸ்புக் பக்கத்தில், "இவர் யார் எனத் தெரிகிறதா? காசி கங்கா ஆர்த்தியின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இது. எல்லா கடவுள்களையும் வணங்குபவர் ரிச்சர்ட் ரிஷி. அப்புறம், முக்கியமான செய்தி... என்னோட அடுத்த படத்தின் கதாநாயகன் ரிச்சர்ட் தான். அறிவிப்பு விரைவில்..." என்று பதிவிட்டுள்ளார்.
'பழைய வண்ணாரப்பேட்டை', 'திரௌபதி', 'ருத்ர தாண்டவம்' போன்ற சர்ச்சையான படங்களை இயக்கிய மோகன்.ஜி, தற்போது, செல்வராகவனை வைத்து இயக்கி இருந்த படம் 'பகாசுரன்'.
இந்த படத்தில் செல்வராகவானுடன் இணைந்து நட்டி நட்ராஜ் நடித்திருந்தார். இந்த படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்திருந்தார்.
ட்விட்டர் அஞ்சல்
ரிச்சர்டுடன் இணையும் மோகன்.ஜி
Richard Rishi Mohan G joining again for new film...
— Karthik Ravivarma (@Karthikravivarm) February 27, 2023
Announcement Soon pic.twitter.com/IPNReiqxYU