
'தலைகீழாக தொங்கிய ஷாட்டின் போது, எனக்கு பீரியட்ஸ்': 'பகாசுரன்' சசிலயா பேட்டி
செய்தி முன்னோட்டம்
மோகன்.ஜி இயக்கத்தில், செல்வராகவன் மற்றும் 'நட்டி' நட்ராஜ் நடிப்பில் சென்ற வாரம் வெளியான திரைப்படம் 'பகாசுரன்'.
இந்த படத்தில், பாலியல் தொழிலாளியாக நடித்திருந்தார் சசிலயா என்று அழைக்கப்படும் லயா.
இணைய பயனாளர்களுக்கு பரிச்சயமான லயா, ஒரு மேடை பேச்சாளர். இந்த படத்தில் அவர் நடித்த அனுபவம் பற்றி ஒரு தனியார் செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டி ஒன்று, தற்போது வைரலாகி வருகிறது.
இந்த படத்தில், ஒரு காட்சியில், லயா தலைகீழாக தொங்க விடப்பட்டிருந்தார். அந்த காட்சியின் படப்பிடிப்பின் போது, அவருக்கு பீரியட்ஸ் என்றும், ஆனால் இதை காரணமாக சொல்லி, ஷூட்டிங்கை தள்ளி வைத்தால், பலரின் வேலை பாதிக்கும் என்றும் கருதி, தான் அதை கூறவில்லை என லயா கூறியுள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
'பகாசுரன்' சசிலயா பேட்டி
"பாலியல் தொழில் பண்றதே இதுனால தான்".. விவரங்களை அடுக்கும் #Bakasuran லயா #Exclusive#Layahttps://t.co/fLds1S5bXr
— Behindwoods (@behindwoods) February 22, 2023