
'டெஸ்ட்': 19 ஆண்டுகள் கழித்து மாதவனுடன் மீண்டும் இணையும் மீரா ஜாஸ்மின்
செய்தி முன்னோட்டம்
கோலிவுட்டின் எவெர்க்ரீன் சாக்லேட் பாய் மாதவனுடன் மூன்றாவது முறையாக இணைய போகிறார் மீரா ஜாஸ்மின்.
மீரா ஜாஸ்மின் தமிழில் அறிமுகம் ஆனது, லிங்குசாமி இயக்கத்தில் 'ரன்' என்ற திரைப்படம் மூலமாக தான்.
அதை தொடர்ந்து அவர் பல படங்கள் நடித்தார். அஜித், விஷால், பரத் என பல இளம் நடிகர்களுடன் அவர் நடித்துக்கொண்டிருக்கும் போதுதான், மணிரத்னம் இயக்கத்தில் 'ஆயுத எழுத்து' என்ற திரைப்படத்தில், மீண்டும் மாதவனுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
தற்போது மீண்டும் 'டெஸ்ட்' என்ற திரைப்படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடிக்கிறார் மீரா ஜாஸ்மின்.
தயாரிப்பாளர் ஷஷிகாந்த், இயக்குனராக அறிமுகமாகும் திரைப்படம் 'டெஸ்ட்'.
இந்த படத்தின் மூலமாக பாடகி ஷக்திஸ்ரீ கோபாலன் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.
ட்விட்டர் அஞ்சல்
டெஸ்ட் படத்தில் நடிக்கும் மீரா ஜாஸ்மின்
Happy to welcome on board #theTEST🏏 the super talented #MeeraJasmine ! ✨@ActorMadhavan #Nayanthara #Siddharth @sash041075 @chakdyn @onlynikil pic.twitter.com/cmNLcbojPG
— Y Not Studios (@StudiosYNot) May 9, 2023