
மார்க் ஆண்டனி: சில்க் ஸ்மிதா வேடத்தில் நடிக்கும் நடிகை யார் எனக்குழம்பும் ரசிகர்கள்
செய்தி முன்னோட்டம்
விஷால்-எஸ்.ஜே.சூர்யா நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான், 'மார்க் ஆண்டனி'.
வரும் செப்டம்பர் 15 அன்று திரைக்கு வரவுள்ள இந்த திரைப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் விழா, இரு தினங்களுக்கு முன்னர் நடைபெற்றது.
அதே நாளில், படத்தின் ட்ரைலரும் வெளியானது. இணையத்தில் வைரலாகி வரும் இந்த ட்ரைலரில், பலரின் கவனத்தை ஈர்த்தது, சில்க் ஸ்மிதா கதாபாத்திரம் தான்.
90'களில் பலரின் கனவுக்கன்னியாக வலம் வந்த மறைந்த நடிகை சில்க் ஸ்மிதா போலவே தோற்றம் தரும் ஒரு கதாபாத்திரம் படத்தில் உள்ளது.
இதை பார்த்த ரசிகர்கள், VFX மூலம் சில்க் ஸ்மிதாவை நடிக்க வைத்தார்களா என இணையத்தில் தேடும் போது கிடைத்த பதில் தான், 'விஷ்ணுபிரியா காந்தி'.
card 2
மேக்அப் உதவியுடன் சில்க் ஸ்மிதாவாக மாறிய விஷ்ணுபிரியா காந்தி
இதுகுறித்து, மார்க் ஆண்டனி படத்தின் மேக்அப் மேன் கிருஷ்ணவேணி பாபு என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிடும் போது, "சில்க் ஸ்மிதாவை மீண்டும் திரையில், எனது கைவண்ணத்தில் காண ஆவலோடு உள்ளேன்" எனக்குறிப்பிட்டு இருந்தார். அந்த பதிவிற்கு விஷால், மற்றும் விஷ்ணுபிரியா காந்தி இருவரையும் டேக் செய்து, அவர்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி தெரிவித்திருந்தார்.
இதனிடையே, 'மார்க் ஆண்டனி' படவிழாவில் சைகை மொழியில் பேசிய நடிகை அபிநயா, நடிகர் விஷால் தனது ஹீரோ என்றும், அவரால் தான் இந்த படவாய்ப்பு கிடைத்ததும் அவரால் தான் எனக்கூறினார்.
அவர் பேச பேச, நடிகர் விஷால் கண்கலங்கி பார்த்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.