Loading...
ஆதி, சத்யராஜ் நடித்துள்ள மரகத நாணயம்-2 திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது
மரகத நாணயம் இரண்டு திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

ஆதி, சத்யராஜ் நடித்துள்ள மரகத நாணயம்-2 திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது

எழுதியவர் Vasuki
Nov 09, 2026
11:49 am

செய்தி முன்னோட்டம்

இயக்குநர் ஏ.ஆர்.கே. சரவணன் இயக்கத்தில் நடிகர் ஆதி, நிக்கி கல்ராணி நடிப்பில் உருவாகியுள்ள மரகத நாணயம் 2 திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியான இதன் முதல் பாகம், நகைச்சுவை மற்றும் ஃபேன்டஸி கலந்த புதுமையான கதைக்களத்தால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அந்த வெற்றியின் தொடர்ச்சியாகத் தற்போது உருவாகியுள்ள இரண்டாம் பாகத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி, சமூக வலைத்தளங்களில் திரைப்பட ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

தொழில்நுட்பக் கலைஞர்கள்

நட்சத்திரப் பட்டாளம்

முதல் பாகத்தைத் தயாரித்த ஆக்சஸ் ஃபிலிம் பேக்டரி நிறுவனமே இப்படத்தையும் தயாரித்துள்ளது.

முந்தைய பாகத்தில் நடித்த ஆதி மற்றும் நிக்கி கல்ராணியுடன் இணைந்து பிரியா பவானி சங்கர், சத்யராஜ் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார்.

முதல் பாகத்தைப் போன்றே மர்மம், அமானுஷ்யம் மற்றும் நகைச் சுவை நிறைந்த சுவாரஸ்யமான காட்சிகளுடன் குடும்பப் பார்வையாளர்களைக் கவரும் வகையில் இப்படம் தயாராகி வருவதாகத் தயாரிப்புத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படப்பிடிப்பு நிறைவு

2027 தொடக்கத்தில் ரிலீஸ் செய்ய திட்டம்

இப்படத்தின் அனைத்துக் கட்டப் படப்பிடிப்புப் பணிகளும் சமீபத்தில் வெற்றிகரமாக நிறைவடைந்ததை படக்குழுவினர் காணொளி வாயிலாக உறுதிப்படுத்தியிருந்தனர்.

தற்போது பின்னணி இசை, ஒலிச்சேர்க்கை மற்றும் கிராபிக்ஸ் உள்ளிட்ட இறுதிக்கட்டத் தயாரிப்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

அனைத்துப் பணிகளையும் விரைந்து முடித்து, 2027-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் திரையரங்குகளில் படத்தை வெளியிடத் தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

முதல் பாகத்தைப் போலவே இந்த இரண்டாம் பாகமும் ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யுமா என்ற ஆவல் கோலிவுட் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

ADVERTISEMENT

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ADVERTISEMENT