
விடுதலை- 2 இல், விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கும் மஞ்சு வாரியார்
செய்தி முன்னோட்டம்
வெற்றிமாறன் இயக்கத்தில் சென்ற மார்ச் மாதம் வெளியான திரைப்படம், 'விடுதலை'.
நடிகர் சூரி கதாநாயகனாக அறிமுகமான இத்திரைப்படம், பலராலும் பாராட்டப்பட்டது.
படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடித்திருந்தார்.
'வாத்தியார்' என்ற கதாபாத்திரத்தில் படத்தின் முக்கிய தருணத்தில் தோன்றும் விஜய் சேதுபதியின் பிளாஷ்பேக் காட்சிகள் இரண்டாம் பக்கத்தில் வெளியாகும் எனக்கூறப்பட்ட நிலையில், தற்போது விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மஞ்சு வாரியார் நடிக்க போகிறார் என செய்திகள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே, வெற்றிமாறன் இயக்கத்தில், 'அசுரன்' திரைப்படத்தில், மஞ்சு வாரியார் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் சூரி தனது சமூக வலைத்தளத்தில், விடுதலை-2 ஷூட்டிங்கிற்கு தயாராவது போல ஒரு வீடியோ பதிவும் வெளியிட்டு, தீவிரமாக ஷூட்டிங் நடைபெறுவதை குறிப்பிட்டார்.
ட்விட்டர் அஞ்சல்
விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மஞ்சு வாரியார்
Exclusive
— Cine OTT (@OttCine) July 25, 2023
▫️#Viduthalai2 Latest Update For This Movie Shooting Going On To So New Member On Board Female Lead To #VijaySethupathi Pair #manjuwarrier Join
Movie Release Plan Next Year's First Half
▪️Follow For Updates @OttCine
🔸#Soori #BhavaniSre #Vetrimaaran pic.twitter.com/5yNyOQ8R0Y