ஏஐ-ஓ, ஒரிஜினல்-ஓ, சும்மா வெறித்தனமா இருக்கும்; வேட்டையனில் மலேசியா வாசுதேவனின் மகன் பாடும் பாடல் வெளியீடு
அக்டோபர் 10ஆம் தேதி திரைக்கு வரவுள்ள வேட்டையன் படத்திற்கான புரமோஷன்களில் படத் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் பிசியாய் ஈடுபட்டுள்ளது. அந்த வகையில், கடந்த செப்டம்பர் 20 அன்று நடந்த வேட்டையன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் இசையமைப்பாளர் அனிருத், நடிகரும் பின்னணி பாடகருமான யுகேந்திரனுடன் இணைந்து பாடும் ஒரு கிளிம்ப்ஸை சன் நெக்ஸ்ட் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. யுகேந்திரன் மறைந்த பின்னணி பாடகர் மற்றும் நடிகர் மலேசியா வாசுதேவனின் மகன் ஆவார். மேலும், மலேசியா வாசுதேவனின் குரலை செயற்கை நுண்ணறிவு மூலம் படத்தின் பாடலில் பயன்படுத்தியுள்ளனர். "ஏஐ-ஓ, ஒரிஜினல்-ஓ ரெண்டும் சும்மா வெறித்தனமா இருக்கும்!" என்ற பதிவுடன் இது எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.