பிரபாஸின் ஆதிபுருஷ் ரிலீஸ் தேதி பற்றிய அப்டேட் தெரிவித்த தயாரிப்பாளர்
ராமாயணத்தை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்படும் படமான ஆதிபுருஷ், ஜூன் 16 திரைக்கு வரும் என அப்படத்தின் தயாரிப்பாளர் கூறியுள்ளார். ஆதிபுருஷ் படத்தின் பர்ஸ்ட்லுக் டீஸர், பலத்த எதிர்பார்ப்புக்கு இடையே வெளியானது. ஆனால், அதில் பயன்படுத்தப்பட்ட VFX மற்றும் கிராபிக்ஸ், பல எதிர்மறை விமர்சனங்களை பெற்றது. அதை தொடர்ந்து, மறுவேலைகள் காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்படுவதாக, படக்குழு அறிவித்தது. பட்ஜெட்டை விட, 100 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்து, படத்தின் மறுவேலைகள் நடைபெறுவதாக செய்திகள் வந்தன. தற்போது, இந்த VFX பணிகள், இறுதி கட்டத்தை எட்டியுள்ளதால், படத்தின் தேதியை உறுதி செய்துள்ளார் தயாரிப்பாளர் ஓம் ரவுத். இப்படத்தில், ராமர் வேடத்தில் பிரபாஸும், ராவணனாக சைப் அலிகானும், சீதையாக க்ரிதி சனோனும் நடிக்கிறார்கள்.