Page Loader
உகாதி அன்று தொடங்கியது 'காந்தாரா 2' ஆட்டம்; ஹோம்பாலே பிலிம்ஸ் அறிவிப்பு
காந்தாரா 2 படத்தின் திரைக்கதை எழுதும் பணி துவங்கியதாக அறிவிப்பு

உகாதி அன்று தொடங்கியது 'காந்தாரா 2' ஆட்டம்; ஹோம்பாலே பிலிம்ஸ் அறிவிப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Mar 22, 2023
06:32 pm

செய்தி முன்னோட்டம்

'காந்தாரா' படத்தின் வெற்றிக்கு பிறகு, அதன் இரண்டாம் பாகம் எடுக்க போவதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. அதற்காக படத்தின் இயக்குனர், ரிஷப் ஷெட்டி, கர்நாடக மாநிலத்தின் காடுகளிலும், அங்கு வாழும் பழங்குடி மக்களிடத்தும் ஆராய்ச்சி செய்து வருகிறார் எனவும் தெரிவிக்க பட்டிருந்தது. காந்தாரா படத்தின் 100வது நாள் வெற்றிவிழா கொண்டாட்டத்தின் போது, படத்தின் நாயகனும், இயக்குனருமான ரிஷப் ஷெட்டி, காந்தாரா படத்தின் இரண்டாம் பக்கம் நிச்சயம் வெளிவரும் என்றும், அது முதல் பாகத்தின் முன்கதை போன்று இருக்கும் எனவும் தெரிவித்திருந்தார். தற்போது, ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்த அந்த அறிவிப்பும் வந்து விட்டது. இன்று 'உகாதி' வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்ட படத்தின் தயாரிப்பாளர்கள், காந்தாரா 2 படத்தின் திரைக்கதை எழுதும் பணி, இனிதே துவங்கியதாக அறிவித்துள்ளனர்.

ட்விட்டர் அஞ்சல்

காந்தாரா 2 அறிவிப்பு