LOADING...
'ஜன நாயகன்' பட வழக்கில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைத்த அமர்வு; ஜனவரி 21 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது

'ஜன நாயகன்' பட வழக்கில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைத்த அமர்வு; ஜனவரி 21 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Jan 09, 2026
05:07 pm

செய்தி முன்னோட்டம்

நடிகர் விஜய்யின் கடைசி படமாக கருதப்படும் 'ஜன நாயகன்' படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்குவது தொடர்பாக தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, அவசர வழக்காக இன்று விசாரித்தது. வழக்கில் CBFC மேல்முறையீடும், படத்தயாரிப்பினரின் வாதத்தையும் கேட்ட தலைமை நீதிபதி, இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை ஜனவரி 21 ஆம் தேதி ஒத்தி வைத்தார். அதோடு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவையும் நிறுத்தி வைப்பதாக தெரிவித்தார். முன்னதாக இன்று காலை தணிக்கை வாரியம் இந்தப் படத்தை மறு ஆய்வுக்கு அனுப்பியதை ரத்து செய்த நீதிபதி பி.டி.ஆஷா, படத்திற்கு உடனடியாக U/A சான்றிதழ் வழங்க உத்தரவிட்டிருந்தார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

Advertisement