GD நாயுடு: மற்றுமொரு வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கும் மாதவன்
கோவை மக்கள் காலரை தூக்கி கொள்ளலாம். ஆம், 'கோவையின் பெருமை', 'இந்தியாவின் எடிசன்' என்று பெருமையுடன் அழைக்கப்படும் G.D.நாயுடுவின், வாழ்க்கை வரலாறு, திரைப்படமாகிறது. அந்த திரைப்படத்தில், G.D.நாயுடு கதாபாத்திரத்தில், மாதவன் நடிக்கிறார். இதுகுறித்த அறிவிப்பு நேற்று வெளியானது. 1893-இல் ஒரு விவசாயிக்குப் பிறந்த ஜி.டி.நாயுடு, பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தியவர். எனினும், அறிவியல் மற்றும் விஞ்ஞானத்தில் அவருக்கு இருந்த ஈடுபாடு மட்டும் குறையவேயில்லை. இந்தியாவின் முதல் மின்சார மோட்டார், மிக மெல்லிய ரேஸர் பிளேடுகள், சேதப்படுத்தாத வாக்கு பதிவு இயந்திரம் மற்றும் மண்ணெண்ணெய் மூலம் இயங்கும் விசிறி என பல அறிவியல் படைப்புகளுக்கு தந்தை ஆவர் G.D. நாயுடு. மாதவன், இதற்கு முன்னர், 'ராக்கெட்ரி' படத்தில் நம்பி நாராயணனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.