அடுத்த செய்திக் கட்டுரை

குறிப்பிட்ட சமூகத்தின் மீது தான் கூறிய ஜோக்கிற்க்காக, விமர்சனங்களை சந்திக்கும் மாதவன்
எழுதியவர்
Venkatalakshmi V
Feb 07, 2023
06:26 pm
செய்தி முன்னோட்டம்
சில மாதங்களுக்கு முன்னர், ஒரு நிகழ்ச்சியில் பேசிய மாதவன், ஒரு நகைச்சுவை நிகழ்வைப் பகிர்ந்து கொண்டார்.
ஆனால், அதற்கான எதிர்மறை விமர்சனங்களை தற்போது எதிர்கொள்கிறார்.
மாதவன் பேசிய அந்த விடியோவை ட்விட்டரில் பகிர்ந்த ஹரிஷ் கோயங்கா என்பவர், அது இவ்வளவு வைரல் ஆகும் என எதிர்பார்த்திருக்க மாட்டார்.
அந்த வீடியோவில், மாதவன் 'அப்துல்' என்ற முஸ்லீம் பெயரை தேர்ந்தெடுத்தது தான் இப்போது அவருக்கு எதிராக மாறியுள்ளது.
சிலர் அவரை, 'இஸ்லாம் வெறுப்புணர்வு கொண்டவர்' என குறிப்பிட்டுள்ளனர்.
மற்றொரு பயனர், "அவரிடமிருந்து இதை எதிர்பார்க்கவில்லை. ஆனால் மக்கள் சொல்வது போல் - ஒரு சிறந்த நடிகர் சிறந்த மனிதராக இருக்க முடியாது" எனவும் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இது குறித்து மாதவன் எதுவும் விளக்கம் அளிக்கவில்லை.
ட்விட்டர் அஞ்சல்
ட்ரோல் செய்யப்படும் மாதவனின் பேச்சு
😀😀😀 pic.twitter.com/2UidDPWuyj
— Harsh Goenka (@hvgoenka) February 4, 2023