NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / மாமன்னன் தான் நடிகராக என் கடைசிப் படம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
    பொழுதுபோக்கு

    மாமன்னன் தான் நடிகராக என் கடைசிப் படம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

    மாமன்னன் தான் நடிகராக என் கடைசிப் படம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
    எழுதியவர் Saranya Shankar
    Dec 15, 2022, 12:56 am 1 நிமிட வாசிப்பு
    மாமன்னன் தான் நடிகராக என் கடைசிப் படம்: அமைச்சர்  உதயநிதி ஸ்டாலின்
    மாமன்னன் தான் கடைசி படம் - உதயநிதி ஸ்டாலின்

    உதயநிதி ஸ்டாலின், ஆளும் கட்சியாகிய திராவிட முன்னேற்ற கழகத்தின் (திமுக) இளைஞரணிச் செயலாளராகவும், சென்னை சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ. ஆகவும் இருந்து வருகிறார். மேலும் இவர் சினிமா தயாரிப்பாளர், நடிகர், விநியோகிஸ்தர் என பல்வேறு துறைகளில் வெற்றிகரமாக இயங்கி வருகிறார். அரசியல், சினிமா என இரண்டு துறைகளிலும் இவர் சம நிலையாக கவனம் செலுத்தி வந்தார். இதனையடுத்து டிசம்பர் 14, புதன்கிழமை மாநில அமைச்சராகப் பதவியேற்றார். பதிவியை ஏற்ற சிறிது நேரத்திலேயே, உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வரவிருக்கும் தமிழ்த் திரைப்படம் மாமன்னன் தான் நடிகராக நடிக்க இருக்கும் தன்னுடைய கடைசி படம் என செய்தியாளர்களிடம் அறிவித்து உள்ளார்.

    சினிமா துறையை விட்டு முழுவதும் விலகுகிறாரா உதயநிதி ஸ்டாலின்?

    கர்ணன் படத்தை இயக்கிய மாரி செல்வராஜ், எழுதி இயக்கும் திரைப்படம் மாமன்னன் ஆகும். உதயநிதி ஸ்டாலினால் தயாரிக்கப்பட்டு வரவிருக்கும் இந்த படம் அரசியல் பரபரப்பூட்டும் திரைப்படம் ஆகும். இப்படத்தில் பகத் பாசில், கீர்த்தி சுரேஷ், வடிவேலு ஆகியோருடன் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ளார். இது தன் கடைசி படம் என அறிவித்து இருந்த நிலையில், உதயநிதி தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயண்ட் மூவிஸ் மூலம் தொடர்ந்து படங்களைத் தயாரித்து விநியோகிப்பாரா என்பது தெளிவாகத் தெரியபட வில்லை. மேலும் கமல்ஹாசன் தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் உதயநிதி நடிக்கும் படத்தை தயாரிக்கப் போவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    உதயநிதி ஸ்டாலின்
    தமிழ் திரைப்படம்
    தமிழ் திரைப்படங்கள்

    சமீபத்திய

    ஆயிரக்கணக்கான தலித் பெண்களுக்கு வாழ்வாதாரம் வழங்கிய 'சிறுதானிய மனிதர்' இந்தியா
    ராமநாதபுரத்தில் உயிரை பணையம் வைத்து கடற்பாசிகளை சேகரிக்கும் மீனவ பெண்கள் ராமநாதபுரம்
    மகளிர் ஐபிஎல் 2023 இறுதிப்போட்டி : முதல் பட்டத்தை வெல்லப்போவது யார்? மகளிர் ஐபிஎல்
    மேற்கு வங்கத்தில் இருக்கும் ஒரு 'பேய்' ரயில்வே ஸ்டேஷன் 42 ஆண்டுகளாக மூடப்பட்டிருக்கிறது! வைரல் செய்தி

    உதயநிதி ஸ்டாலின்

    பிரதமர் மோடியுடனான சந்திப்பு குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி டெல்லி
    பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு: 2,300 மாநகர பேருந்துகளில் கண்காணிப்பு கேமராக்கள் சென்னை
    இன்பநிதி புகைப்படங்கள்: சூசகமாக பதிலளித்த கிருத்திகா உதயநிதி! ஸ்டாலின்
    "நான் ஒரு கிறிஸ்தவன் என்பதில் பெருமைக் கொள்கிறேன்": அமைச்சர் உதயநிதி திமுக

    தமிழ் திரைப்படம்

    மற்றுமொரு முக்கோண காதல் கதையா? லைக்காவின் புதிய பட அறிவிப்பால் ரசிகர்கள் குழப்பம் திரைப்பட அறிவிப்பு
    நிலஅதிர்விலும் காஷ்மீர் படப்பிடிப்பை சூப்பராக முடித்த 'லியோ' படக்குழு; அடுத்த ஷெட்யூல் சென்னையில்! திரைப்பட அறிவிப்பு
    'பத்து தல' படத்தின் ட்ரைலர் இன்றிரவு வெளிவரும் என அறிவிப்பு; இன்று மாலை படத்தின் ஆடியோ லான்ச் நடைபெறுகிறது திரைப்பட அறிவிப்பு
    பொன்னியின் செல்வன் அப்டேட், படத்தின் ஸ்பாய்லரான மொமெண்ட்! வைரலான ட்வீட்

    தமிழ் திரைப்படங்கள்

    இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் என்னென்ன?! ஓடிடி
    எந்த படத்தை எங்கே காணலாம்? இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடியில் வெளியாகவிருக்கும் படங்களின் பட்டியல் தமிழ் திரைப்படம்
    இந்த ஆண்டு தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான, அறிமுகம் ஆகவிருக்கும் நடிகைகள் கோலிவுட்
    'சேது' முதல் 'அயோத்தி' வரை: வாய்மொழி விமர்சனங்களால் வெற்றி அடைந்த தமிழ் படங்கள் தமிழ் திரைப்படம்

    பொழுதுபோக்கு செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Entertainment Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023