LOADING...
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி: மணிரத்னம் படத்தின் அறிவிப்பு வெளியானது
VJS- மணிரத்னம் படத்தின் அறிவிப்பு வெளியானது

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி: மணிரத்னம் படத்தின் அறிவிப்பு வெளியானது

எழுதியவர் Venkatalakshmi V
Mar 20, 2026
11:48 am

செய்தி முன்னோட்டம்

'செக்கச் சிவந்த வானம்' படத்திற்கு பிறகு இயக்குநர் மணிரத்னம் மற்றும் விஜய் சேதுபதி இணையும் புதிய திரைப்படம் குறித்து சில தினங்களுக்கு முன்னர் ஒரு செய்தி இணையத்தில் வைரலானது. அதன்படி, மணிரத்னம் தனது 30 ஆண்டுகால 'ரஹ்மான்' கூட்டணியை முறித்துக் கொண்டு, புதிய தலைமுறை இசையமைப்பாளருடன் இணைய போவதாக கூறப்பட்டது. தற்போது அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மெட்ராஸ் டாக்கீஸின் 23வது படத்தின் தயாரிப்பு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த திரைப்படத்தில் மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சாய் பல்லவி நடிக்கின்றனர். இப்படத்திற்கு இசையமைக்கவிருப்பது ஏ.ஆர். ரஹ்மான் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவரங்கள்

திரைப்பட விவரங்கள்

நீண்ட இடைவேளைக்கு பின்னர் மணிரத்னம் இந்த படத்தை ஒரு ரோமாண்டிக் டிராமாவாக எடுக்கவுள்ளார் என செய்திகள் கூறுகின்றன. இப்படம் சாய் பல்லவி முதன்முறையாக மணிரத்னத்துடன் இணைவதை குறிக்கிறது. படத்தின் படப்பிடிப்பு இந்த கோடையில் தொடங்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த காதல் திரைப்படத்தை மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கிறது.

Advertisement