LOADING...
'கூலி' விமர்சனம் என்னை பாதிக்காது என ஹீரோவாக களமிறங்கும் லோகேஷ் கனகராஜ்! இதுவும் கேங்ஸ்டர் படமா?
இந்த படத்தின் பூஜை இன்று நடைபெறுகிறது என செய்திகள் வெளியாகியுள்ளன

'கூலி' விமர்சனம் என்னை பாதிக்காது என ஹீரோவாக களமிறங்கும் லோகேஷ் கனகராஜ்! இதுவும் கேங்ஸ்டர் படமா?

எழுதியவர் Venkatalakshmi V
Oct 23, 2025
12:38 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விரைவில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார் என்ற செய்தி சில மாதங்களாகவே சமூக வலைத்தளத்தில் அடிபட்டு வந்தது. இந்த நிலையில் அந்த செய்தி கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. சாணி காயிதம், கேப்டன் மில்லர் புகழ் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கும் இந்த புதிய படம் கேங்ஸ்டர் படமாக உருவாகிறது. இந்த படத்தின் பூஜை இன்று நடைபெறுகிறது என செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த படத்திற்காக லோகேஷ் கனகராஜ் பல வித சண்டை பயிற்சிகள் மற்றும் தற்காப்பு கலை பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. அதோடு இந்த படத்திற்காக அவர் புது கெட்அப்பில் ரெடியாவதாகவும் கூறப்படுகிறது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

கூலி

'கூலி' படத்திற்குப் பிறகு லோகேஷின் புதிய பாதை

லோகேஷ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'கூலி' திரைப்படம் ரசிகர்களிடமிருந்து எதிர்பார்த்த அளவிலான வரவேற்பை பெறவில்லை. இருப்பினும், அதனால் மனம் உடையாமல் லோகேஷ் தனது அடுத்தகட்ட பயணத்தில் நடிப்பிற்கு இடம் கொடுக்க முடிவு செய்துள்ளார். அவர் தற்போது 'கைதி 2' மற்றும் ஆமிர் கானுடன் இணைந்து ஒரு புதிய படத்தையும் இயக்கப்போவதாக கூறப்படுகிறது. இது தவிர, மீண்டும் ரஜினிகாந்துடன் இணைந்து ஒரு படத்தை அவர் இயக்க போவதாகவும், இதற்காக லோகேஷ் மூன்று வெவ்வேறு ஸ்கிரிப்ட்களை தயார் செய்துள்ளார் என்றும், கூலியில் விட்ட 'மாபெரும் பிளாக்பஸ்டரை', இந்த படத்தின் மூலம் பெற வேண்டும் என தீர்மானித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.